அதுக்கு வேற ஆள பாருங்க சிவகார்த்திகேயன் பிடிவாதம்!
குழந்தைகளும் விரும்பினால்தான் ஒரு ஹீரோ, சூப்பர் ஹீரோ ஆக முடியும். அதை வெகு காலமாகவே நிரூபித்து வருகிறார்கள் ரஜினியும் விஜய்யும். இவர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் குழந்தை குட்டிகளின் நச்சரிப்பு தாங்காமலே குடும்பமும் தியேட்டருக்கு கிளம்புகிறது. இப்படி சிங்கிள் டிக்கெட் குரூப் டிக்கெட்டாக மாறி, கலெக்ஷனும் கொட்டோ கொட்டென கொட்டுகிறது. இந்த ஒரு விஷயத்திற்காகவே தங்கள் படங்களில் குழந்தைகளை கவர்கிற அம்சம் இருக்கிறதோ, இல்லையோ? ஆபாசம் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்வார்கள் அவர்கள்.
அந்த பாலிஸியை சிவகார்த்திகேயனும் பின்பற்ற நினைக்கிறார். ஆனால்? விட்டால்தானே!
அவர் தற்போது நடித்து வரும் ‘டாணா’ படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு லிப் கிஸ் அடிக்கிற காட்சி ஒன்று இருக்கிறதாம். என்னங்க இது? என் படத்தை குழந்தைகளெல்லாம் பார்க்கிறாங்க. நான் எப்படி இப்படியெல்லாம் நடிப்பது என்று சிவகார்த்திகேயன் தயங்க, முத்தம் வச்சே தீரணும் என்று பிடிவாதம் காட்டினாராம் இயக்குனர். ஒரு கட்டம் வரைக்கும் இதற்கு சம்மதிக்கவே இல்லையாம் சிவகார்த்திகேயன். அதற்கப்புறம் படத்தின் தயாரிப்பாளர் தனுஷிடம் கூறினாராம் இயக்குனர்.
அப்புறம் அவரே இந்த விஷயத்தில் தலையிட்டு கட்டாயப்படுத்த, அரை மனசோடு இச் வைத்திருக்கிறார் சிவா.
கிடைக்காதான்னு ஒரு குரூப்பு அலையுது. கிடைச்சதையும் வேணாங்குறாரு ஒருத்தரு. ஒண்ணுமே புரியல ஒலகத்துல…
very good principle siva anna…thats why ladies and kids likes u very much..congratz.