அட… நீங்களே தேடிப் போய்டீங்களா? சிவா தரும் அதிர்ச்சி!

‘விஸ்வாசம்’ படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்ட கே.ஜே.ஆர் ராஜேஷ்தான் இப்போதைய கோடம்பாக்கத்தின் வைட்டமின் எம். விஸ்வாசத்தில் பல கோடிகள் லாபம். அது தவிர நயன்தாராவை வைத்து சில படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கும் நல்ல வரவேற்பு. சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ஒன்றின் தயாரிப்பாளரும் இவர்தான்.

இது போதாதா? இன்டஸ்ட்ரி மொத்தமும் இவருக்கு சோப்பு போட அலையாய் அலைகிறது. முக்கியமாக சிவகார்த்திகேயன். எப்படி ஆர்.டி.ராஜாவை தன் இடைக்கால(?) அண்ணனாக வைத்துக் கொண்டிருந்தாரோ, அப்படி ராஜேஷை வைத்துக் கொள்ளவும் துடிக்கிறாராம். அன்றாடம் இவரை சந்திக்க சிவாவே வருவதுதான் இன்டஸ்ட்ரியின் ஆச்சர்யப் பேச்சு.

தேனடையை பிதுக்கி தெருத் தெருவா பீய்ச்சாம விட மாட்டாங்க போலிருக்கே?

1 Comment
  1. ராஜா says

    பேட்ட ரஜினியின் மாஸ் படம் என கொண்டாடப்பட்டது. படங்கள் வெளியான சில தினங்களிலேயே, விஸ்வாசம் படத்துக்குதான் அதிக வசூல் என்பதைப் போல சமூக வலைத் தளங்களில் சிலர் எழுதினர். இதற்கு பின்னணியில் பெரும் பணம் கைமாறிய உண்மைகள் வெட்ட வெளிச்சமாகின. அதை உறுதிப்படுத்துவது போல, விஸ்வாசம் படத்தின் விநியோகஸ்தர் கொட்டபாடி ராஜேஷ் படம் வெளியான 7 நாட்களிலேயே ரூ 125 கோடியை, அதுவும் தமிழகத்திலேயே வசூலித்துவிட்டதாக ஒரு பெரும் பொய்யை அவிழ்த்துவிட, திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. பேட்ட படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அலட்டிக் கொள்ளவே இல்லை. அந்தப் படத்தின் வசூல் விவரங்கள் தெளிவாக, குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகி வந்தன. படம் வெளியாகி 30 நாட்கள் கழிந்த நிலையில் பேட்ட ரூ 320 கோடியை உலகெங்கும் வசூலித்துள்ளது உறுதியானது. விஸ்வாசம் படத்துக்கு அப்படி எந்த தகவலும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் புக்மைஷோ செயலி மூலம் பேட்ட படம் ரூ 90 கோடியை இதுவரை வசூலித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்குப் போட்டி என்று சொல்லிக் கொண்ட அஜித்தின் விஸ்வாசம் ரூ 41 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. அதாவது பேட்ட பட வசூலில் கிட்டத்தட்ட பாதிதான் விஸ்வாசம் படத்துக்குக் கிடைத்துள்ளது.
    காலா வசூலைகூட எட்டாத நாயெல்லாம் குலைக்குது. அச்சீத்தூ….
    எனக்கு இப்பவெல்லாம் டீ கடையில மசால் வடை பார்த்தா…. அஜித் மூஞ்சி தா வந்து போகுது,….. உங்களால ஒரு வடைய கூட சாப்டமுடியாம பன்னிட்டெங்கலடா…
    “தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் ரஜினி எந்த உயரத்தில் இருக்கிறார்… அவரது இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் ‘இறங்கி வேலைப் பார்க்கும்’ அஜித், விஜய் போன்ற நடிகர்கள் எந்த இடத்தில் உள்ளனர் என்பதற்கு இது சின்ன சாம்பிள்தான்…”,

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கண் போன போக்கில் கால் போகலாமா கமல் சார்?

Close