கண் போன போக்கில் கால் போகலாமா கமல் சார்?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ‘வந்தா மல… போன மண்ணு’ என்கிற முடிவோடு இறங்கப் போகிறாராம் கமல். இவர் பிரபலப்படுத்திய கிராமசபை ஐடியாவை அப்படியே காப்பியடித்து களம் இறங்கிவிட்டது தி.மு.க. இதில் சற்றே அப்செட் ஆனாலும், பணத்தை தாராளமாக செலவு செய்வது என்கிற முடிவை எடுத்திருக்கிறாராம்.
ஆனால் பணம்? படங்களில் நடிப்பதையும் அநேகமாக நிறுத்திவிட்டார். (இந்தியன் 2 தான் அவரது கடைசிப் படம்) அப்படியிருக்க அது எங்கிருந்து வரும்? நாலாபுறத்திலிருந்தும் கடன் வாங்கியும் சொத்துக்களை விற்றும் கட்சிக்கு செலவு செய்து கொண்டிருக்கிறாராம்.
குணம் போன போக்கில் மனம் போனால், கடைசியில் ரணமாகி குணமாக வேண்டியதுதான்!
அரசியல்வாதிக்கு கொடுக்கற பணம் ஒன்லி அவுட் கோயிங்.