விஸ்வரூபம் எடுத்தது பாம்பா? கமலா?

இன்னுமா உலகம் இந்த கதையெல்லாம் நம்புது? என்று வாய்விட்டு புலம்பவே முடியாது. ஏனென்றால் தமிழில் மட்டுமல்ல. தெலுங்கு கன்னடம் இந்தி என்று எல்லா மொழிகளிலும் பாம்பை கடவுளின் ரூபமாக சித்திரிக்கிற வழக்கம் இப்போதும் இருக்கிறது. இந்த படங்கள் வசூலிலும் பெருத்த அளவில் கல்லா கட்டுவது அந்த பாம்புக்கு தெரிந்தால் ராயல்டி கேட்காமல் விடாது.

இப்போதென்ன பாம்பு கதை?

‘சோக்காலி மைனர்’ என்றொரு படம் தமிழில் வரப்போகிறது. நாகார்ஜுனா இரண்டு வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணனும், லாவண்யா திரிபாதியும், அனுஷ்காவும் நடித்திருக்கிறார்கள். (எத்தன பேரு?) இதில்தான் அந்த பாம்புக்கதை.

சிவன் கோவிலை காவல் காக்கும் நல்ல பாம்பு ஒன்று எந்நேரமும் விழிப்புடன் இருக்க, கோவில் அறங்காவலரான நாகார்ஜுனாவின் எச்சரிக்கையையும் மீறி கோவிலை கொள்ளையடிக்க வருகிறார் சம்பத்ராஜ். அந்த நேரத்தில் அங்கு காவலுக்கு இருக்கும் பாம்பு விஸ்வரூபம் எடுக்கிறது என்று இப்படத்தின் முக்கியமான காட்சியை மிரள மிரள விவரிக்கிறார் இயக்குனர் கல்யாண் கிருஷ்ண குரசாலா.

விஸ்வரூபம் எடுத்தது கமலா, நல்ல பாம்பா? அதுவா முக்கியம்? படத்துல அனுஷ்கா இருக்காருல்ல. அதுதான்… அதுதான்…

1 Comment
  1. Pisaasu Kutti says

    This could be a dubbing film. (Sokkaade Chinni Naaina)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜல்லிக்கட்டு வெற்றியை மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் லாரன்ஸ் – Stills Gallery

Close