தந்திரமாக வெளியான சோலோ! சாட்டையை தூக்கிய விஷால்?
அரசு விதித்திருக்கும் 10 சதவீத கேளிக்கை வரியை முற்றிலும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று 6 ந் தேதி முதல் புதுப்படங்களை வெளியிட தடை விதித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். விஷாலின் புதிய உத்தரவு சில தயாரிப்பாளர்களை கடுமையாக சங்கடப்படுத்தினாலும், ஏதாவது ஒரு வழி பிறந்தால் சரி என்கிற மனோபாவத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். வருகிற தீபாவளி முதல் தியேட்டர்களும் மூடப்படுவதாக தியேட்டர்கள் சங்கமும் அறிவித்துள்ளன.
அதுவரை தற்போது ஓடிக் கொண்டிருக்கும் படங்களுக்கு ஆபத்தில்லை என்ற நிலையில், தந்திரமாக ஒரு முடிவை எடுத்தது சோலோ திரைப்படக்குழு. 6 ந் தேதிதானே ரிலீஸ் பண்ணக் கூடாது? நாங்க 5 ந் தேதி பண்ணிக்குறோம் என்று ஜம்மென்று அட்வான்சாக கிளம்பி தியேட்டருக்கு வந்துவிட்டது.
அப்ப நாங்க ஏமாளிகளா? என்று பாதிக்கப்பட்ட சிறுபட தயாரிப்பாளர்கள் குமுறியடி தயாரிப்பாளர் சங்கத்தை மொய்க்க…. இந்த தந்திரத்திற்கு ஒரேயடியாக முடிவு கட்டினார் விஷால்.
இன்னைக்கு ரிலீஸ் பண்ணிட்டாங்க. ஆனால் நாளைக்கு ஒரு தியேட்டர்ல அந்தப்படம் ஓடக் கூடாது. க்யூப்ல சொல்லி நிறுத்துங்க என்று உத்தரவிட்டுவிட்டார். ஆக மொத்தம் நேற்று ஒரே நாளோடு சுருண்டுவிட்டது சோலோ.
படம் ஓடியிருந்தா மட்டும் என்ன நடந்திருக்குமாம்… இதேதான் நடக்கப் போவுது என்று இந்த ஒரு நாளில் படம் பார்த்தவர்கள் விமர்சிப்பது தனிக்கதை.
https://youtu.be/pKLzAYj0-u0