கடா முடாவான கருப்பன் கலெக்ஷன்! அதற்குள் மரம் ஏறிய விஜய் சேதுபதி!

அவதார் டைரக்டரையும் ஆதிக் ரவிச்சந்திரனையும் ஒண்ணா சேர்த்து படம் எடுக்க வைத்தால்தான் ‘ஒரு டிபரண்ட் காம்பினேஷனா இருக்கே?’ என்று தியேட்டருக்குள் வருவார்கள் போல… அந்தளவுக்கு எந்த படத்திற்கும் பெரிதாக ரீயாக்ஷன் காட்டுவதில்லை திருவாளர் ரசிகன்.

அஜீத்தின் விவேகம் படமே 50 சதவீத நஷ்டம் என்று கிளம்பிவிட்டார்கள் விநியோகஸ்தர்கள். நிலைமை இப்படியிருக்கும் போது ஹரஹரமஹாதேவகி தவிர, அதனுடன் வந்த ஸ்பைடர், கருப்பன் இவ்விரு படங்களுக்குமான கலெக்ஷன் படு சுமார் என்கிறது தியேட்டர் வட்டாரம். கருப்பன் கூட ஓரளவுக்கு பார்டரை டச் பண்ணி நிற்கிறது. ஸ்பைடர்தான் படு பாதாளம் என்கிறார்கள்.

ஆனால் இந்த உண்மையை விசாரித்தாரா, இல்லையா தெரியாது. விஜய் சேதுபதி தன் சம்பளத்தை அப்படியே டபுள் ஆக்கிவிட்டதாக வயிறு வலியாகிறது இன்டஸ்ட்ரி. முன்பு நான்கு கோடியோடு நின்று கொண்டிருந்த விஜய் சேதுபதி, கருப்பன் ரிலீசுக்கு பின் எட்டு கோடியாக்கிவிட்டாராம் தன் சம்பளத்தை. அதுமட்டுமல்ல… பார்ட்னரா சேர்த்துகிட்டா பாதி சம்பளம். மீதி கமிஷன் என்ற முறையிலும் பேச ஆரம்பித்திருப்பதால் குழம்பிக் கிடக்கிறது குட்டை.

ஒரு தகவல் தெரியுமா? விஜய் சேதுபதி படத்திலேயே படு சுமார் என்று விமர்சிக்கப்பட்ட புரியாத புதிர், வெளியிட்ட தயாரிப்பாளருக்கு இரண்டரை கோடி லாபத்தை கொடுத்திருப்பதாகவும் ஒரு பேச்சு. விளையும்னு நினைக்கறது கருகறதும், கருகும்னு நினைக்கறது விளையறதும்தான் சினிமா கணக்கு.

இது யாருக்கு புரியுது?

Read previous post:
தந்திரமாக வெளியான சோலோ! சாட்டையை தூக்கிய விஷால்?

Close