வன இலாகா அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கும் “சாயா”

சாயா என்பதற்கு சக்தி நிறைந்த என்று பொருள். அந்த சக்தி நிறைந்த வார்த்தைக்கும் ஆத்ம சக்திக்கும் நல்ல நோக்கத்திற்குமான தொடர்பு இருப்பதால் படத்திற்கு சாயா என்று பெயரிட்டுள்ளனர்.

சந்தோஷ் என்கிற புதுமுகம் அறிமுகமாகிறார். அவருடன் டூரிங் டாக்கீஸ் படத்தின் நாயகியாக காயத்திரி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்த கௌதமி செளத்ரி நடிக்கிறார். காட்டிற்குள் நடக்கும் கடுமையான சண்டைக் காட்சிகளில் பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார் சோனியா அகர்வால். வன இலாகா அதிகாரியாக வரும் சோனியா அகர்வாலுக்கு இப்படம் ஒரு மாறுபட்ட இமேஜை உருவாக்கித் தரும். தவிர, அவருக்கு ஆக்சன் ரூட் போட்டுக்கொடுக்கும் படமாகவும் உருவாகியுள்ளது “சாயா”.

இதுவரை எடுக்கப்பட்ட பேய்ப் படங்களில் ஆவிகளைப் பற்றி மட்டும் பேசியுள்ளனர். பயம் காட்டுவதையும் சப்தங்களால் மிரட்டுவதையும் விட்டுவிட்டு இப்படம் புனிதமான ஆத்மாக்கள் பற்றி பேசும். ஆத்மாக்களின் நல்ல நோக்கம் இந்த சமுதாயத்திற்கும் மாணவர்களுக்குமான தேவையை நிறைவேற்றும் புதுமையான திரைக்கதையுடன் படம் பயணிக்கும் என்கிறார் இயக்குனர் V.S. பழனிவேல்.

ஆர் சுந்தர்ராஜன், Y.G. மகேந்திரன், ‘பாய்ஸ்’ ராஜன், பயில்வான் ரங்கநாதன், பாலாசிங், கராத்தே ராஜா, கோவை செந்தில், கொட்டாச்சி, சபீதா ஆனந்த் ஆகியோர் படத்திற்கு தங்கள் அனுபவப்பட்ட நடிப்பின் மூலம் வலு சேர்த்துள்ளனர். ஜான் பீட்டர் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்கிறார் எஸ். பார்த்திபன். எடிட்டிங்கை ராஜ்குமார் கையாள, கலையை மாரியப்பன் கவனித்திருக்கிறார். பவர் பாஸ்ட்டின் சண்டைப் பயிற்சியிலும் ரமேஷ் கமல் நடனஅமைப்பிலும் பரபரவென உருவாகியுள்ளது ”சாயா”.

தயாரிப்பு நிர்வாகத்தை R. மதுபாலனும், தயாரிப்பு மேற்பார்வையை ஆத்தூர் ஆறுமுகமும் செய்துள்ளனர். கதை, திரைக்கதை, இயக்கம் செய்வதுடன், பாடல்களையும் எழுதியுள்ளார் – V.S. பழனிவேல். அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார் V.S. சசிகலா பழனிவேல்.

பெரம்பலூரில் உள்ள பச்சை மலைப் பகுதிகள், சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது ”சாயா”.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Bongu Press Meet Stills Gallery

Close