டோனியோட நெய்பர் ஆகிட்டாரு சூரி! பணம் பங்களா வரைக்கும் பாயும்…

நம்ம நாட்டு கிரிக்கெட் வீரர் டோனியும், நம்ம ஊரு காமெடி வீரர் சூரியும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பிதான் ஆகணும். யெஸ்… பிரபல கிரிகெட் வீரர் தோனிக்கு சென்னை ஈசிஆர் சாலையில் ஒரு வீடு இருக்கிறது. இந்த வீட்டை தோனி வாங்காவிட்டாலும், அவருக்கு பரிசாக வந்ததாக சொல்கிறார்கள்.

அப்படியே இந்தப்பக்கம் வாங்க. காமெடி நடிகர் சூரி சென்னையில் பல இடங்களில் வீடுகளையும் அலுவலக கட்டிடங்களையும் வளைத்து வளைத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் வாங்கிய அலுவலகம் ஒன்றுக்கு அவர் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா? ஒரு காலத்துல வாய்ப்பு தேடி அலைஞ்சப்ப அந்த ஆபிஸ்லேர்ந்து வாய்ப்பு கிடைக்காம சோகமா வெளியேறியிருக்கேன். பல வருஷம் கழிச்சு அந்த இடம் விலைக்கு வருதுன்னு சொன்னதும் உடனே வாங்கிட்டேன் என்றார். அப்படி பார்த்து பார்த்து வேட்டையாடும் சூரி, சென்னை ஈசிஆரில் டோனி வீடு அமைந்திருக்கும் அதே தெருவில் அபார்ட்மென்ட் வீடு ஒன்று விலைக்கு வந்தால் விடுவாரா?

விற்க வந்தவர்கள், ‘கிரிக்கெட் வீரர் டோனியோட வீடும் ரெண்டு வீடு தள்ளிதான்’ என்ற தகவலை சொன்னார்களாம் சூரியிடம். நமக்கு கிரிக்கெட்டெல்லாம் தெரியாதுண்ணே. கிட்டிப்புல் மட்டும்தான் தெரியும். இருந்தாலும் நீங்க சொல்ற டோனிய பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். நமக்கும் ஒரு பெருமையா இருந்துட்டு போவட்டுமே… என்று அப்படியே அந்த வீட்டை பெரும் விலைக்கு சம்மதித்து அமுக்கி கொண்டாராம்.

இந்த வீட்டையும் சேர்த்து சூரி வாங்கி சேர்த்திருப்பது இது ஐந்தாவது வீடாம். இன்னும் கூட நிறைய வாங்குங்க. பரவால்ல… ஆனா சின்ன வீடு மட்டும் வேணாம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எஸ்.ஜே.சூர்யா, பிரபுசாலமனுக்கு பிடித்த ‘வரியா…? ‘

தனிநபர் ஆல்பத்திற்க்கான  வரவேற்பு உலக நாடுகளில் பிரபலமாக இருக்கும் போது ஏன் இந்தியாவில் மட்டும் இல்லை , என்ற கேள்வி என்னுள் எழுந்த போது தான் இந்த...

Close