பூர்ணிமாவுக்கு பாக்யராஜை விட்டுக் கொடுத்தேன்! சுஹாசினி பரபரப்பு!
சிஷ்யன் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதை கட்டி கட்டியாய் சர்க்கரையை கொட்டி நிரூபித்தார் பார்த்திபன். இவர் இயக்கிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, வெறும் சம்பிரதாய விழாவாக முடியாமல், சாதனை விழாவாக முடிந்தது. தனது குருநாதர் கே.பாக்யராஜுக்கு சாதனை விழாவை எடுத்து சிறப்பித்துவிட்டார். தமிழ் திரையுலத்தின் நிலை பெற்ற படைப்பாளிகளான பாரதிராஜாவும், ஷங்கரும் வந்திருந்து வாழ்த்தினார்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன், ஏ.வி.எம்.சரவணன், எஸ்.ஏ.சந்திரசேகர் என்று ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்த… அந்த விழாவில்தான் கே.பாக்யராஜ் பற்றி எத்தனையெத்தனை செய்திகள்!
அதில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுஹாசினி சொன்னதுதான் பலத்த அதிர்ச்சியும் ஆச்சர்யமும்!
“இந்த இடத்தில் இதை சொல்லலாமா, வேண்டாமான்னு தெரியல. இருந்தாலும் சொல்லிடுறேன்” என்று பேச ஆரம்பித்தார். “டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடிக்க முதலில் எங்கிட்டதான் கேட்டாங்க. அப்போ நான் அதே தேதியை ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க கொடுத்துட்டேன். கதையை கேட்டதும் இந்த படத்தை விடறதுக்கு மனசில்லே. இருந்தாலும், அந்த தெலுங்கு பட தயாரிப்பாளரிடம் கேட்கலாம்னு போனேன். ஆனால் அவர் அனுமதிக்கல. நான் நடிக்க வேண்டிய கேரக்டர்லதான் பூர்ணிமா நடிச்சாங்க. அந்தப்படத்தில்தான் அவங்களுக்குள்ளே காதல் வந்திச்சு” என்று கூறிவிட்டு, அர்த்தத்தோடு ஒரு ‘கேப்’ விட, அரங்கத்தில் பலத்த கைத்தட்டல்!
இந்த சமூகத்திற்கு ஒவ்வொரு விஷயமும் என்னமோ ஒரு சேதி சொல்ல நினைக்குது. அது மட்டும் நல்லாவே புரியுது!
https://youtu.be/zfOyfSRf0ko