பொதுமேடையில் இளையராஜாவை விமர்சித்த கங்கை அமரன்!

கங்கை அமரனையும் கலகலப்பையும் தனித்தனியாய் பிரிக்க வேண்டும் என்றால், அதற்கு சூரசம்ஹாரம் எடுத்து வந்தாலும் முடியாது. துக்கமோ…சந்தோஷமோ… மனதில் இருப்பதை கொட்டி, மற்றவர்கள் தலையிலும் லாவமாக குட்டி, ஒரு களேபர கச்சேரியே நடத்திவிடுவார். பெரும்பாலும் அவரது மேடைகளில் வறுக்கப்படுவது அவரது சொந்த அண்ணன் இசைஞானி இளையராஜாவாகதான் இருக்கும். நேற்றும் அந்த வேலையை பக்குவமாக செய்தார் அவர்.

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, குரு வணக்கம் விழாவாக கொண்டாடப்பட்டது. தனது குருநாதர் கே.பாக்யராஜை மேடையில் வைத்து கொண்டாடி விட்டார் பார்த்திபன். பாக்யராஜை அறிமுகப்படுத்திய பாரதிராஜா இல்லாமல் அந்த விழா எப்படி நிறைவு பெறும்? அவரும் வந்துவிட்டார். ஒருகாலத்தில் இந்த ஜாம்பவான்களின் நிழல் போலவே வலம் வந்த கங்கை அமரனும் வந்துவிட்டார். அப்புறமென்ன? பிளாஷ்பேக்குகளுக்கு பஞ்சமேயில்லை. அதில் ஒரு பிளாஷ்பேக்கை அவிழ்த்துவிட்டார் கங்கை.

“‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜை நடிக்க வைக்கறதுக்கு முன்னாடி, அந்தப்படத்தின் ஹீரோ நான்தான். பாரதிராஜாண்ணன் பிக்ஸ் ஆகிட்டார். விளம்பரம் கூட கொடுத்தாச்சு. அதற்கப்புறம் இளையராஜாண்ணனோட கம்போசிங்ல உட்கார்ந்தாங்க. அப்புறம் என்ன நடந்திருக்கும்னு நான் சொல்ல தேவையில்ல. அவன் ஹீரோன்னா நான் மியூசிக் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டார். அப்புறம்தான் பாக்யராஜ் வந்தார். இருந்தாலும், அதில் நான் பாடல் எழுதினேன். தந்தண தந்தண தாளம் வரும்னு புல் ஸ்டாப்பே இல்லாமல் பாட்டு எழுதினேன். அதனால்தான் பாக்யராஜும் வளர்ந்துகிட்டே வர்றாருன்னு நினைக்கிறேன்” என்றார்.

அப்படியே கங்கை அமரன் சொன்ன இன்னொரு விஷயம் இது. முந்தானை முடிச்சு படத்திற்கும் முதலில் இவர்தான் இசைமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டாராம். ஆனால் படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனம், ‘இளையராஜாவே இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டதாம்.

சில பேருடைய சரித்திரத்தில்தான் சுவாரஸ்யத்தை தாண்டி அக்கப்போர்களும் நிறைந்திருக்கின்றன!

https://youtu.be/4fhjBQODbYk

1 Comment
  1. Bhairava says

    APHERALD telugu site has this news: Keerthi Suresh is currently the luckiest actress as she has signed all big projects with star heroes in short span. Recently, she completed a big project along with a star hero in tamil and she is expecting the release of the movie.
    Now, close sources revealed that the movie is not up to the mark. The movie was wrapped up recently and dubbing works went at a Private studio in Chennai. During dubbing session, most of them confessed that the movie seems to be so ‘Silly’.
    This has caused a huge upset for Keerthi. She is now resting her hopes on Telugu industry as she is looking forward towards Pawan Kalyan — Trivikram Srinivas project. Keerthi Suresh is now confessing to her near ones that she feels bad for signing that particular movie.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பூர்ணிமாவுக்கு பாக்யராஜை விட்டுக் கொடுத்தேன்! சுஹாசினி பரபரப்பு!

சிஷ்யன் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதை கட்டி கட்டியாய் சர்க்கரையை கொட்டி நிரூபித்தார் பார்த்திபன். இவர் இயக்கிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் பாடல் வெளியீட்டு...

Close