முதல்வர் கவலைக்கிடம்! அஜீத், சிம்பு ரசிகர்கள் பிரார்த்தனை!

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 4 ந் தேதி மாலை நான்கு மணியளவில் அவருக்கு திடீர் மாரடைப்பும் ஏற்பட்டதால், சிறிதளவுக்கு முன்னேற்றத்தை சந்தித்து வந்த அவரது உடல்நிலை மீண்டும் சிக்கலுக்குள்ளானது. இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதை அடுத்து நாடெங்கும் பதற்றம் உருவானது.

உடனடியாக வெளிநாட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவருக்கு ஆன்ஜியோ போல ஒரு அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு வினாடி மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் அவர். இந்த நிலையில் நாடெங்கும் உள்ள அஜீத் ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும் முதல்வர் மீண்டும் நலமுடன் திரும்பி வர பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினியும் முதல்வர் விரைவில் நலம் பெற்றுவர இறைவனை வேண்டுவதாக குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வந்த படப்பிடிப்புகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

https://youtu.be/RNvocY1utd4

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பொதுமேடையில் இளையராஜாவை விமர்சித்த கங்கை அமரன்!

கங்கை அமரனையும் கலகலப்பையும் தனித்தனியாய் பிரிக்க வேண்டும் என்றால், அதற்கு சூரசம்ஹாரம் எடுத்து வந்தாலும் முடியாது. துக்கமோ...சந்தோஷமோ... மனதில் இருப்பதை கொட்டி, மற்றவர்கள் தலையிலும் லாவமாக குட்டி,...

Close