ராஜ மாதாவை இப்படி ஆக்கிட்டாங்க! ரம்யா கிருஷ்ணன் குறித்து சூர்யா சிரிப்பு!

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யாவை விட, கீர்த்தி சுரேஷைவிட விக்னேஷ்சிவனால் அதிகம் பாராட்டப்பட்டவர் ரம்யா கிருஷ்ணன்தான். இவர் மட்டுமா பாராட்டினார்? மைக்கை பிடித்த எல்லாருமே ர.கி. பற்றி நாலு வார்த்தை விலாவாரியாக பேசாமல் மேடையை விட்டு இறங்கவில்லை.

பல வருஷம் கழிச்சு என்னோட படம் பெஸ்டிவலுக்கு வருது. நினைக்கவே சந்தோஷமா இருக்கு. இந்த வருஷம் ஒரு படத்தில்தான் என்னால நடிக்க முடிஞ்சுது என்று கூறி தனது பேச்சை துவங்கினார் சூர்யா. கீர்த்தியை சின்ன வயசுல பார்த்தது. அதுக்குள்ள 20 வருஷம் ஓடிப்போச்சான்னு இருக்கு என்று சிரித்துக் கொண்டவர், ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை சிலாகிக்க ஆரம்பித்தார். அவங்க நடிக்கும் போது பார்த்துகிட்டே இருக்கலாம். அப்படியிருக்கும்.

இந்த படத்தின் ஸ்டில் ஒன்றை கொஞ்ச நாளைக்கு முன் வெளியிட்டோம். அதை பார்த்த ரசிகர்கள் ‘ராஜ மாதாவை இப்படி காட்டிட்டீங்களே?’ என்று ட்விட்டரில் கமென்ட் போட்டிருந்தார்கள். அப்படியொரு கேரக்டர்ல நடிச்சுட்டு சட்டுன்னு இப்படியும் நடிக்க முடியும்னு வந்த துணிச்சல் வேற யாருக்கும் வராது’ என்றார்.

ஒவ்வொருவரின் பாராட்டையும் தன் அலட்டிக் கொள்ளாத புன் சிரிப்பால் ஏற்றுக் கொண்டார் ராஜமாதா!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
குடி… அலட்சியம்… ஷுட்டிங் வராமல் டிமிக்கி! ஜெய் மீது பலூன் தயாரிப்பாளர் புகார்!

யாராவது நடிக்க வாய்ப்பு தருவார்களா? என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரியும் பலர், குறிப்பிட்ட நடிகராக இடம் பிடித்த பின் செய்கிற அமர்க்களம் இருக்கிறதே... அது...

Close