துக்க வீடு… ஐந்து மணிநேரம் அங்கேயே இருந்த சூர்யா!
சினிமா நட்பு என்பது ரயில் பயணத்தை விட மோசமானது. எந்த ஸ்டேஷனில் யார் இறங்கிக் கொள்வார்கள் என்பதை அறிந்து கொள்ளவே முடியாது.
கோடம்பாக்கத்தில் அதை நிரூபிப்பது போல ஏராளமான சம்பவங்கள் நடந்து கொண்டேயிருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் வெளியிலிருந்து நோட்டம் விடுகிறவர்களுக்கு அந்த நட்பை விமர்சிக்கவும், பாராட்டவும், திட்டவும் ஏராளமான சந்தர்ப்பங்கள் அமைந்து கொண்டேயிருக்கும். இதுவும் அப்படியொரு சம்பவம்தான்.
சமீபத்தில் இயக்குனர் கே.வி.ஆனந்தின் தந்தை காலமாகிவிட்டார். கவண் ரிலீஸ் டென்ஷனில் இருந்த அவருக்கு, தந்தையின் திடீர் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்குமல்லவா? அவருக்கு ஆறுதல் சொல்ல தமிழ்சினிமா இன்டஸ்ட்ரியே திரண்டு போய் நிற்க வேண்டும் என்பது இல்லைதான். ஆனால் அவரது படத்தில் நடித்தவர்கள், அவரோடு சம்பந்தப்பட்டதால் துட்டு சம்பாதித்தவர்கள் அலைகடலென திரண்டு போய் நின்றிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் நடந்ததே வேறு. விஜய் சேதுபதி வந்திருந்தார். அரை மணி நேரம் இருந்துவிட்டு கிளம்பிவிட்டார்.
ஆனால் கே.வி.ஆனந்தின் மாற்றான், அயன் ஆகிய படங்களில் நடித்த சூர்யா ஓடோடி வந்தாராம். சுமார் ஐந்து மணி நேரம் அங்கேயே இருந்திருக்கிறார். கடைசி நேர விஷயங்களுக்காக தேவைப்படும் மாரல் சப்போர்ட்டுகளையும் செய்தாராம். நீங்க கிளம்புங்க. நான் பார்த்துக்குறேன் என்று கே.வி.ஆனந்த் சொன்னதையும் மீறி, மயானம் வரைக்கும் சென்றிருக்கிறார்.
பாராட்டுகிறோம் சூர்யா!
https://youtu.be/zlI5lfIKEmA