ஓ.பி.எஸ். அதிரடி! கமல் ஆர்யா குஷ்பு சப்போர்ட்! பின்னால் திரளும் தமிழ்சினிமா?

நேற்று வரை மிக்சர் மாமா என்று வர்ணித்த அதே இளைஞர் கூட்டம், இப்போது தலைவா… நீதான்யா வீரன் என்று கைதட்ட ஆரம்பித்துவிட்டது. யாரும் வராவிட்டாலும் தனி ஒருவனாக நின்று சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என்று துணிச்சலாக பேசியும் எதிர்த்தும் வருகிறார் ஓ.பி.எஸ். தமிழகத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே உன்னிப்பாக கவனிக்க வைத்திருக்கும் அவரது பேச்சு சினிமா இன்டஸ்ட்ரிக்குள் ஏற்படுத்திய சலசலப்பு என்ன? சந்தோஷம் என்ன?

கமல்ஹாசன் துவங்கி, நண்டு சுண்டைக்காய் வரைக்கும் ஓ.பி.எஸ் சை பாராட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். யார் யார் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள். இதோ-

கமல்ஹாசன்: சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம,இந்த நேரத்துல ஒருdubsmashஆவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர் then only actors

சித்தார்த்: மெரினாவில் ஓபிஎஸ். தமிழக அரசியல் உண்மையான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்’ சீரியல்களைப் போலவே இருக்கிறது.

ஆர்யா: சரியான நேரத்தில் துணிவான, சிறந்த பேச்சு ஓபிஎஸ் சார். பாராட்டுகள்.

அருள்நிதி: தைரியமான பேச்சு. தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையை அறியச் செய்து, அவர்களிடத்தில் நேர்மையாக நடந்திருக்கிறார் ஓபிஎஸ்.

இசையமைப்பாளர் டி.இமான் : இதுதான் சிறந்த வழி. தமிழ்நாட்டு அரசியலில் நம்பிக்கையை துளிர்விட்டிருக்கிறது. சரியான இடத்தில் இருந்து, சரியான நேரத்தில், சரியான பேச்சு! நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது. #OPS

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் : ‘கண்ணா சிங்கம் சிங்கிளாதான் வரும்!’ #OPS வீரப்பேச்சு. எங்களின் இதயத்தை வென்றுவிட்டீர்கள். ரகசியமாகப் புதைந்துகிடக்கும் உண்மைகளையும் வெளிக்கொண்டு வாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். #OPSsirappu

தயாநிதி அழகிரி : ஓபிஎஸ் இத்தனையையும் புதைத்து வைத்திருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் ஆகச் சிறப்பு முதல்வரே!எப்போது வேண்டுமானாலும் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படாலாம். ஆனாலும் துணிவாகப் பேசியிருக்கிறார். #OPS #Modi தமிழ்நாட்டில் மீண்டும் ஒருமுறை மோடி அலை.

குஷ்பு : திகைப்புடன் காத்திருக்கிறேன். ஓபிஎஸ் மவுனத்தைக் கலைப்பார் என்று நம்புகிறோம். போராட்டமா இல்லை வெறும் அஞ்சலியா? நாடகத்தின் முடிச்சு முழுமையாக அவிழட்டும். ஒரு தலைவர் உதயமாகிறார்.

சாந்தனு : தமிழ்நாட்டு அரசியலில் என்ன ஒரு திருப்பம். பன்னீரின் தைரியமான பேச்சு அவர் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது!

இவர்கள் கருத்து ஒருபுறமிருக்க, இன்று ஓ.பி.எஸ் வீட்டுக்கே போய் தனது ஆதரவை தெரிவித்தார் இயக்குனர் கே.பாக்யராஜ். மேலும் பல ஹீரோக்கள் அவருக்கு தொலைபேசியில் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

https://youtu.be/hrVWMtS6nx4

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“VIKRAM-GOUTHAM MENON FIGHT”-DHURUVANATCHATHIRAM STOPED.

https://youtu.be/oBaZKkmVxzI

Close