கார்த்திக் சுப்புராஜை நேரில் வரச்சொல்லி ரிவிட்!

தயாரிப்பாளர் சங்கம் படார் திடீர்!

குழம்பிய குட்டையில் கசங்கிய சட்டையாய் கிடக்கிறது கோடம்பாக்கம். நான் சொல்வதுதான் சரி என்று ஒரு பக்கமும், இல்லயில்ல…. நான் சொல்றதுதான் சரி என்று இன்னொரு பக்கமும் இழுத்துக் கொண்டிருக்க, விடிஞ்சா போதும் என்று காத்திருக்கிறார்கள் பணம் போட்ட தயாரிப்பாளர்கள்.

தீர்வு வரும்வரைக்கும் காத்திருப்பதுதான் சரியானதாக இருக்கும். ஆனால் கார்த்திக் சுப்புராஜ் தனது மெர்க்குரி படத்தை வெளியிடுவேன் என்று ட்விட் போட, வந்தது வினை. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், கார்த்திக் சுப்புராஜுக்கே நேரடியாக போன் போட்டு லெப்ட் ரைட் வாங்கினாராம். அடுத்த அரை மணி நேரத்தில் நான் சொல்ல வந்ததை தப்பா புரிஞ்சுகிட்டாங்க. நான் வேற லாங்குவேஜ்ல ரிலீஸ் பண்ணுவேன்னுதான் சொன்னேன் என்று ஒரு மறுப்ஸ் போட்டு தப்பித்தார் சுப்புராஜ்.

அதற்கப்புறம்?

இன்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் வரச்சொல்லி உத்தரவு போயிருக்கிறதாம். அப்படி வராத பட்சத்தில் எந்த லாங்குவேஜுலேயும் படம் இயக்க முடியாதளவுக்கு தடை விழும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறதாம். முதலில் தான் லண்டனில் இருப்பதாக புழுகிய கார்த்திக் சுப்புராஜ், இன்று மாலை வருவதாக உறுதியளித்திருக்கிறாராம்.

அர்ச்சனை சாமான்கள் ரெடி. அண்ணன் வர்ற நேரத்துக்காக அத்தனை பேரும் வெயிட்டிங்…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஷாலை குறை சொல்வது தான் உங்க வேலையா?

https://www.youtube.com/watch?v=I0kiAOMWzG8&t=1312s

Close