தானா சேர்ந்த நஷ்டம்! புட்டு புட்டு வச்சுட்டீயே பரட்டை?
அவருக்கு கீ கொடுத்துட்டு, எங்களுக்கு பேட்டரிய புடுங்கிட்டீங்களே? என்று சூர்யா மீது கோபமாகிக் கிடக்கிறது விநியோகஸ்தர் வட்டாரம். ஏன்? தானா வந்து வம்பில் மாட்டிய சூர்யாவின் ஐடியாதான். சில தினங்களுக்கு முன் டைரக்டர் விக்னேஷ்சிவனுக்கு ஒரு கார் பரிசளித்தார் சூர்யா. எதற்காம்? இவர் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ பெரிய ஹிட். அதற்கு தரப்பட்ட பரிசுதான் இந்த கார்.
தன் படம் நஷ்டம் என்று நாக்கு மேல பல்லு போட்டு பேசுவதற்கு முன்பே கார் பரிசு என்று அறிவித்து அதை மீடியாவிலும் பரவவிட்டால், பல்லும் போச்சு. சொல்லும் போச்சு என்று ஆகிவிடும் அல்லவா? இந்தக்கணக்கில்தான் அப்படியொரு செயலை செய்திருக்கிறார் சூர்யா.
ஆனால் தானா சேர்ந்த கூட்டம் படத்தை வாங்கி வெளியிட்ட சேலம் விநியோகஸ்தர் தனது கணக்கை அப்படியே வெளியிட்டு, ஓடாத தோல்விப் படத்துக்கு ஏன் இந்த பில்டப்பு? என்று கேட்காமல் கேட்டிருக்கிறார்.
தன்னை சுற்றி பாசிட்டிவ் வைப்ரஷன் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் நிஜத்தை மறைக்க முடியாத பாசிட்டிவ் வைப்ரஷன் எந்த வகையிலும் பிரயோஜனமில்லை அல்லவா?
இருந்தாலும் இன்னொரு டவுட். விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் கொடுக்கும் கள்ளக் கணக்குகளும்தான் இப்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறதே… அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
கீழே- விநியோகஸ்தரின் லாப நஷ்ட கணக்கு…