ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை! நயன்தாரா ஆக்ஷன்!
தமிழ்சினிமாவின் ‘வந்தாளே மகராசி…’ நம்ப நயன்தாராதான்! ஆணாதிக்கம் நிறைந்த இன்டஸ்ரியை அசால்ட்டாக டீல் பண்ணிய விதத்தில் அவர் இன்னொரு ஜெ.
‘தன்னம்பிக்கை, துணிச்சல், நீ எவ்ளோ பெரிய ஆளாயிருந்தா எனக்கென்ன?’ என்கிற பேராற்றல் எல்லாம் நிறைந்த நயன்தாராவுக்கு, அதே மரியாதையை அள்ளிக் கொடுத்து வணங்க ஆரம்பித்துவிட்டது இன்டஸ்ட்ரியும். நயன்தாரா பட ஷுட்டிங் கிட்டதட்ட ரஜினிகாந்த் பட ஷுட்டிங் போலதான் நடக்கிறது. யூனிட் அவருக்கு கொடுக்கும் மரியாதை அப்படி.
இப்படி வெளியுலகத்தில் மட்டுமல்ல, திரைக்குள்ளும் தனக்கான மரியாதையை தக்க வைக்கப் போகிறார் நயன். எப்படி? மீஞ்சூர் கோபி இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அல்லவா? இந்தப் படமே அவரது பணத்தில் நயன்தாராவின் பினாமி ஒருவர் தயாரிப்பதுதானாம். கதைப்படி நயன்தாரா ஒரு கலெக்டர். தண்ணீர் பிரச்சனையால் தத்தளிக்கும் கிராமம் ஒன்றில், கலெக்டர் தலைமையில் பேச்சு வார்த்தை நடக்கிறது. அப்போது குடிநீருக்காக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்துவிடுகிறது. கலெக்டர் தன் மனிதாபிமானத்தாலும், புத்தி சாதுர்யத்தாலும் எப்படி அந்த குழந்தையை காப்பாற்றினார் என்பதே கதை.
ஒரே நாளில் முடிவதாக திரைக்கதை அமைத்திருக்கிறாராம் கோபி. ஆழ்துளை கிணறுகளை மூடாமல் விட்டு, அநேக குழந்தைகளை சாகடித்த பாவிகளுக்கு இந்தப்படம் சரியான செருப்படியாக இருக்குமாம். அதுமட்டுமல்ல, இனிமேல் அவ்வாறு நடக்காமலிருக்க விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படமாகவும் இருக்குமாம்!
கருத்துள்ள கதையில் நடிப்பதோடு நிற்காமல் அதை தயாரிக்கவும் முன் வந்த நயன்தாவுக்கு ஒரு ஸ்பெஷல் வணக்கம்!
To listen audio click below:-