திரையுலக ஜாம்பவான் பஞ்சு அருணாசலம் மறைவு!
பாடல், இயக்கம், தயாரிப்பு என தமிழ் திரையுலகத்திற்கு எத்தனையோ சாதனைகள் செய்திருந்தாலும், இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் என்கிற மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் பஞ்சு அருணாசலம். உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. அவர் காலமான செய்தியை அறிந்த திரையுலகம் பேரதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளது.
இசைஞானி இளையராஜா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை தன் நட்பு வளையத்திற்குள் வைத்திருந்த பஞ்சு அருணாசலம், ப்ரியா, எங்கேயோ கேட்ட குரல், மைக்கேல் மதன காமாராஜன், குருசிஷ்யன், வீரா உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். அன்னக்கிளி, புவனா ஒரு கேள்விக்குறி, மீண்டும் கோகிலா உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதிய பெருமையும் இவருக்கு உண்டு.
இவரது மகன் சுப்பு பஞ்சு, படங்களில் நடித்து வருகிறார். இவரை தவிர மகன், மகள்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்கள் வருகைக்குப்பின் அடல் தகனம் செய்யப்படும் விபரங்கள் பின்பு தெரிவிக்கப்பட இருக்கிறது.