சிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்!

‘நேற்று முதல் நீ யாரோ, இன்று முதல் நான் வேறோ’ என்றாகிவிட்டார் சிம்பு. அவரது நடவடிக்கைகளில் படு பயங்கர மாற்றம். இது எங்கு கொண்டு போய் விடுமோ என்பதுதான் அச்சமாக இருக்கிறது.

சில தினங்களுக்கு முன் கர்நாடக மக்களிடம், ஒரு கிளாஸ் தண்ணிக் கொடுங்க என்பதில் ஆரம்பித்தது அவரது அட்ராசிட்டி. அது நல்ல முறையில் கிளிக் ஆனதுதான் தாமதம். சிம்புங்கிற ஒரு மனுஷன், சாதாரண ஆள் இல்ல. இந்த சொசைட்டிய சுத்தப்படுத்த வந்த சோஷியல் சுனாமி என்பதை தெள்ளந் தெளிவாக புரிந்து கொண்டார். சில தினங்களுக்கு முன் கிளம்பி சேலம் போயிருந்தவர், அங்குள்ள சோஷியல் ஆக்டிவிஸ்ட் பியூஷ் மானுஷ் என்பவரின் முயற்சியில் தூர் வாரப்பட்ட ஏரியை சோதனை செய்தார். இதே போல நாடு முழுக்க காணாமல் போன ஏரிகளையும் நீர் நிலைகளையும் மீட்டெடுக்க என்ன செய்வது என்று திட்டமிடுகிறாராம்.

அதோடு விட்டாரா மனுஷன்? ஏடா கூடமாக மத்திய மாநில அரசுகளை விமர்சித்த மன்சூரலிகானை சிறையில் தள்ளிவிட்டார்கள் அல்லவா? அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லையாம் அவரது குடும்பத்தினருக்கு. பார்க்கவும் அனுமதிக்கவில்லையாம் போலீஸ். ஏதாவது குற்றம் செய்தால் கூட மன்னித்து விடுங்கள். அவரை விடுதலை செய்ங்க என்று இன்று சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து முறையிட வந்திருந்தார். ஆனால் சிம்புவை சந்தித்தது காவல் ஆணையர் அல்ல. வேறொரு அதிகாரி.

சிம்பு கேட்ட கேள்விகளுக்கு முறையாக விளக்கம் அளித்தாராம் அவர். மன்சூரு மீது என்னென்ன தவறுகள் என்பதையும் பொறுமையாக விளக்கியிருக்கிறார். தன் கோரிக்கையை ஏற்று விடுவித்தால் ஓ.கே. இல்லாவிட்டால், அடுத்த கட்ட முடிவு பற்றி பிறகு அறிவிக்கிறேன் என்று மீடியாவிடம் கூறிவிட்டு கிளம்பினார் சிம்பு.

படப்பிடிப்புக்கே வர மாட்டார். அவரை பார்ப்பதே கடினம். அவர் ஒரு டைப்பான ஆள் என்றெல்லாம் சிம்பு மீது இருந்த பிம்பம், அண்மைக்காலமாக உடைக்கப்பட்டு வருகிறது. இந்த மாற்றத்தை தாங்க முடியாமலும், நம்ப முடியாமலும் கன்பியூஸ் ஆகிக்கிடக்கிறது தமிழகம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா?

https://www.youtube.com/watch?v=jHAgKUUFTzY

Close