மோகினிப் பிசாசு த்ரிஷா லண்டனில் ஆடிய ஆட்டம்!


ஆளை அச்சுறுத்தும் அத்தனை மோகினிப் பேய்களும் அழகாகதான் இருக்கிறார்கள். அப்படியொரு மோகினிப் பேய் கதையை எழுதி விட்ட ஆர்.மாதேஷ், பொருத்தமான நடிகையை தேடிய போதுதான் பொசுக்கென சிக்கினார் த்ரிஷா! எல்லா நடிகைகளாலும் நடிக்க முடியும்தான். ஆனால் த்ரிஷாவால் மட்டும்தான் இந்த கதைக்கு உயிர் கொடுக்க முடியும் என்று மாதேஷ் நினைத்ததற்கு பின்னால், குறைந்த பட்சம் ஆறு காரணம் கூட இல்லை. ஆனால் மூன்று மட்டும் உறுதியாக இருந்தது. அது?

படம் முழுக்க ஹீரோயினை ரோப் கட்டி தூக்கணும். அதுக்கேற்ற ஒல்லி, அதை தாங்குகிற தெம்பு, அறுபதடி உயரத்தில் கொண்டு போய் நிறுத்தினாலும் அசராத மன வலிமை. மாதேஷின் இந்த எதிர்பார்ப்பை அடுத்து, ‘இம்மூன்று மட்டுமல்ல… இன்னும் ஏதாவது அதிரடி இருந்தாக் கூட சொல்லுங்க. செஞ்சுருவோம்’ என்று வந்து நின்றார் த்ரிஷா. அதைவிட இந்த ‘மோகினி’ படத்திற்காக ஆறு மாதங்களுக்கு மேல் நான்-ஸ்டாப் கால்ஷீட் கொடுக்கிற அளவுக்கு தன்னை ப்ரீயாகவும் வைத்துக் கொண்டார் அவர்.

அப்புறம் என்ன? ஜம்மென்று லண்டனுக்கு கிளம்பிவிட்டார்கள். முதலில் லண்டன். பிறகு அங்கிருந்து பாங்காக், அதற்கப்புறம்தான் தமிழ்நாடு. நடுநடுவே ஆறேழு நாடுகளுக்கு விசிட் அடித்து பாடல் காட்சிகளையும் செதுக்கிக் கொண்டு வந்துவிட்டார் மாதேஷ்.

‘இன்னைக்கு சினிமா ரசிகர்களின் பார்வை, வேறு வேறு பொழுதுபோக்குகளை நோக்கி போயிருச்சு. அவங்களை தக்க வைச்சுக்கணும்னா, பர்சை இறுக்கிப் பிடிக்காம பணத்தை அள்ளிக் கொட்டணும். தயாரிப்பாளர் லட்சுமணன் அதற்கு தயாராக இருந்தார். படத்தில் ஒரு நீர்வீழ்ச்சியை காட்டியிருக்கோம். ட்ரெய்லரில் அதை பார்த்தவர்கள் தினந்தோறும் போன் பண்ணி பாராட்டிகிட்டேயிருக்காங்க. ஆனால் நாங்க அந்த நீர்வீழ்ச்சிக்காக எங்கெல்லாம் அலைந்தோம் என்பது எங்களுக்குதான் தெரியும். அதுமட்டுமல்ல… படத்தில் வரும் கம்ப்யூட்டர் காட்சிகளுக்காக மட்டும் லட்சங்களை அள்ளி வீசியிருக்கிறார் தயாரிப்பாளர். அது முடியவே ஆறு மாதங்களுக்கு மேலாச்சு’ என்று படம் பற்றிய பாசிட்டிவ் விஷயங்களை அள்ளிக் கொட்டுகிறார் மாதேஷ்.

சமகாலத்து அஜீத் விஜய்யாக இருக்கும் த்ரிஷா நயன்தாராவில், நயனுக்கு மட்டும் லாட்டரி யோகம். பின் தங்கியிருக்கும் த்ரிஷா, ‘மோகினி வரட்டும்’ என்று உறுமிக் கொண்டிருக்கிறார்.

மோகினிப் பிசாசு, தேவதையாகும் அந்த நாளுக்குதான் அவரது ரசிகர்களும் வெயிட்டிங்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிம்பு இல்லாத இடத்தில் சிம்புவால் சண்டை! யாரு கொடுத்த கீ சார் இது?

ஜல்லிக்கட்டு, கோழி பைட், ரேக்ளா ரேஸ் இதையெல்லாம் விட பிரமாதமான பொங்கல் அதிரடி ஒன்று உண்டென்றால் அது சினிமா மேடைகள்தான். ‘கீ’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு...

Close