சிம்புவை பற்றி விமர்சனம்! டி.வி தொகுப்பாளருக்கு கொலை மிரட்டல்! (மிரட்டல் ஆடியோ இணைப்பு)

பிரபல செய்தி சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருப்பவர் முபாஷீர். இவர் நடத்தி வரும் ஒரு சினிமா நிகழ்ச்சியில் சிம்புவை பற்றி ஏதோ விமர்சிக்கப் போக, மேற்படி தொகுப்பாளரை ‘ரவுண்டு கட்டி’ அடித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். இத்தனைக்கும் விஷாலுக்கும் சிம்புவுக்கும் இடையே உள்ள பிரச்சனை பற்றிதான் விமர்சித்தாராம் அவர். அந்த நிகழ்ச்சி நடந்தபோது அதை ரசிகர்கள் பார்த்தார்களா, அல்லது சிம்புவே பார்த்தாரா தெரியாது. அடுத்த நிமிஷமே அடுப்பில் உலை வைத்து, அதில் முபாஷீரையே அள்ளிப் போட்டு கொதிக்க வைத்துவிட்டார்கள்.

“என்னம்மா… எங்க தலய நீ பற்றி இப்படி தப்பு தப்பா பேசியிருக்கே? அவர் ரசிகர்களெல்லாம் உன் மேல செம டென்ஷன்ல இருக்காங்க. உன் போன் நம்பர் தமிழ்நாடு முழுக்க இருக்கிற எஸ்.டி.ஆர் ரசிகர் மன்றத்துக்கு போயிடுச்சு. உன்னை…?” என்று சிம்புவே…. ஸாரி சிம்பு குரலிலேயே ஒருவர் முபாஷீருக்கு போன் பண்ணி மிரட்டியதுதான் இந்த செய்தியின் ருசிகரமான க்ரைம் ஏரியா! “உன் வீட்டு அட்ரசை தேடிகிட்டு இருக்காங்க. ஜாக்கிரதையா இரும்மா” என்று அந்த ஆடியோ மிரட்டல் முடிவதுதான் முபாஷீரையும் அவரது செய்தி சேனலையும் கடும் ஆத்திரத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

அந்த ஆடியோவில் வந்த மிரட்டலையடுத்து, முபாஷீர் போட்டோவை போட்டு கண்டமேனிக்கு திட்டியும் தீர்க்கிறார்கள் பேஸ்புக்கில். அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் மட்டும் தெரிந்தால், பேஸ்புக்கை கண்டுபிடித்த மார்க்கே கடையை மூடிவிட்டு கிளம்பினாலும் ஆச்சர்யமில்லை.

ஆமா… அந்த ஆடியோவுல தல…தல…ன்னு அந்த ரசிகர் (?) யாரையோ சொல்றாரே அது யாருப்பா? தமிழ்சினிமாவுல நமக்கு தெரிஞ்சு ஒரே தலதானே இருக்கார்!?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
என் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்! மலேசிய பிரஸ்மீட்டில் ரஜினி

மலேசியாவை விட்டு பாங்காக் கிளம்புவதற்கு முன் ரஜினி மலேசிய பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது மலேசியாவில் தன்னுடைய கபாலி பட ஷுட்டிங் அனுபவங்களை மிகவும் ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டார்....

Close