சமந்தா குரல் அழகா? சின்மயி குரல் அழகா? பதில் சொல்ல திணறிய ஹீரோ!
மாஸ்கோவின் காவேரி வந்த புதிதில் சமந்தாவும் வறண்டு போன காவேரியாகதான் இருந்தார். இப்போது கரை புரண்டு ஓடுகிறது காவேரி. தமிழ், தெலுங்கு மொழிகளின் அழகுச் செல்லம்! நாகார்ஜுனா வீட்டு கட்டி வெல்லம்! ஏராளமான ரசிகர்களின் நிழல் உள்ளம் என்று சமந்தாவின் வாழ்வில் பசுமையோ பசுமை!
இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் யு டேர்ன், மற்றும் சீம ராஜா படங்களில் சமந்தாதான் ஹீரோயின். கடந்த சில தினங்களாகவே சென்னையில் வட்டம் போட்டது வண்ணத்துப்பூச்சி. பிரமோஷனுக்காக தனி பில் போடும் நடிகைகளில் சமந்தா டாக்ஸ் ஃப்ரீ என்கிறது கோடம்பாக்கம். கட்…
யு டேர்ன் பிரஸ்மீட்டில் சமந்தாவை புகழ்ந்து தள்ளினார் தொகுப்பாளினி ரம்யா. ஒரு காலத்தில் இவரும் அவரும் மாடலிங் செய்து கொண்டிருந்தார்களாம். சமந்தா ஹீரோயின் ஆனதும் இல்லாமல் மேல் வீட்டு மருமகளும் ஆகிவிட்டார். அந்த மேடையில் யு டேர்ன் படத்தில் சமந்தாவின் நடிப்பு குறித்து எல்லாரும் பரணி பாடி முடித்துவிட்டார்கள். நடுவே பேச வந்த ராகுல் ரவீந்திரன்தான் சிக்கிக் கொண்டார்.
மாஸ்கோவின் காவேரி படத்தில் சமந்தாவுடன் இவரும் நடித்திருந்தார். பல வருடங்கள் கழித்து யு டேர்ன் படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். இது குறித்து பேச வந்த தொகுப்பாளினி ரம்யா, உங்க மனைவி சின்மயி குரல் அழகா? இல்ல… சமந்தாவின் குரல் அழகா? என்று கொக்கிக் போட, குடும்பத்துல ஏம்மா குழப்பத்தை விளைவிக்கிற? என்பது போலவே எதிர்கொண்டார் ராகுல்.
பாடும்போது சின்மயி குரலும், பேசும்போது சமந்தா குரலும் அழகு என்று சொல்லிவிட்டு அவர் ஓடிய ஓட்டம் இருக்கே, ஒலிம்பிக் கெட்டது!
இந்தப்படத்தை தமிழில் வெளியிடுகிறார் போஃப்டா தனஞ்செயன். காக்கா முட்டை, அருவி மாதிரி உங்களை ஆச்சர்யப்படுத்துகிற படம் யுடேர்ன். நிச்சயம் உங்களோட ஆதரவு கிடைக்கும் என்றார் நம்பிக்கையுடன்.
நல்ல படங்களுக்கு மஞ்சப்பூசி மரியாதை கொடுப்பதில் எங்களை அடிச்சிக்க யாராலும் முடியாது. வேணும்னா ‘மேற்கு தொடர்ச்சி மலை’ குழுவை கேட்டுப்பாருங்க சாரே…!
thinariya hero! wow! who? Rahul Ravindran is not a hero material. He is just a pass by. Some stupid producer going to lose money. he does not have a tamil face. SORRY.