விஸ்வாசம் விலை என்ன? லபக்கென அமுக்கிய அறம் தயாரிப்பாளர்!

ஆலமரம் கிளை விரிச்சா ஆயிரமாயிரம் குருவிகளுக்கு அதுதான் பிளாட், வில்லா! தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் வரும்போதெல்லாம், தியேட்டரில் குறுக்கும் நெடுக்கும் திரியும் எலிகளுக்கு கூட செம தீனி கிடைக்கும். கேண்டீனில் துவங்கி, பைக் டோக்கன் வரைக்கும் பரபரக்கும். அதற்காகவே காத்திருக்கும் தியேட்டர் வளாகத்திற்கு இது போன்ற தித்திப்பான செய்தி எப்போதெல்லாம் வரும்?

ரஜினி, கமல், அஜீத், விஜய்யில் துவங்கி, அதற்கப்புறம் ஒரு அஞ்சாறு நடிகர்கள் வரைக்கும்தான் இந்த கோலாகலம். அப்படியிருக்க… ஒரு புதிய கோலாகலத்திற்கு ஸ்கிரீன் ஓப்பன் பண்ணியிருக்கிறார் அறம் தயாரிப்பாளர் ராஜேஷ். விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை சுமார் 47 கோடிக்கு வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல… க்யூப் விளம்பரம் உள்ளிட்ட இதர செலவான 3 கோடியையும் சேர்த்தால் படத்தின் விலை 50 கோடி!

விவேகம் படத்தின் நஷ்டம் காரணமாக விநியோகஸ்தர்கள் முணுமுணுத்து வரும் வேளையில் எப்படி தைரியமாக இப்படியொரு வியாபாரம் நடந்து முடிந்தது? அங்குதான் சாம பேத தான தண்டம் போன்ற எல்லா முறைகளிலும் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களை வழிக்கு கொண்டு வந்தார்களாம். விவேகம் வாங்கிய அதே விநியோகஸ்தர்களுக்கே படம் தருவது. முந்தைய படத்தின் நஷ்டம் போக மீதியை பெற்றுக் கொள்வது என்ற இரண்டு அதிரடிகள் மூலம் சலசலப்பை காலி பண்ணியிருக்கிறார் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ்.

இந்த செய்தியை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விவேகம் படத்தின் அத்தனை பஞ்சாயத்துகளும் முடிவுக்கு வந்திருக்கும். போன படத்தில் விட்டதை இந்தப்படத்தில் அமுக்குங்க அஜீத்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சமந்தா குரல் அழகா? சின்மயி குரல் அழகா? பதில் சொல்ல திணறிய ஹீரோ!

Close