தீபாவளிக்கு வந்தாகணும்! அஜீத் ஆசையால் மூன்று ஷிப்ட் ஓட்டம்!
‘வேதாளம்’ தீபாவளிக்கு வராது! கோடம்பாக்கத்தில் வெகு வேகமாக பரவி வரும் விஷயம் இதுதான். அதற்கு காரணமாக அவர்கள் சொல்வது, இன்னும் ஆறு நாள் ஷுட்டிங் மீதியிருக்கிறது. செகன்ட் பார்ட் டப்பிங் பணிகளை அஜீத் இன்னும் முடிக்கவேயில்லை. இதையெல்லாம் எப்போது முடித்து எப்போது படத்தை ரிலீஸ் செய்ய? அதனால் இந்த தீபாவளிக்கு அஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.
ஆனால் இப்படி வரும் செய்திகளை படித்தும் கேட்டும் பகீர் சிரிப்புக்கு ஆளாகியிருக்கிறதாம் வேதாளம் டீம்! தீபாவளிக்கு கண்டிப்பா வர்றோம். எங்கே… என்னோடு சேர்ந்து ஓடியாங்க பார்க்கலாம் என்று கூறிய அஜீத், அடிபட்ட தன் காலை அசுர வேகத்தில் வைத்திருக்கிறார். கடந்த சில தினங்களாகவே பரபரவென போய் கொண்டிருக்கிறது டப்பிங். காலையில் டப்பிங் தியேட்டருக்கு வந்துவிடும் அஜீத், நிறுத்தி நிதானமாக அதே நேரத்தில் யாரும் எதிர்பாராத வேகத்தில் டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறாராம்.
இன்னொருபுறம் படத்தின் மிச்ச மீதி ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. நடுநடுவே சம்பள பாக்கி, பேட்டா நிறுத்தம் என்ற தகவல்களும் வந்ததல்லவா? அதிலும் வியத்தகு திருப்பம். தொழிலாளர்களுக்கு அப்படியொரு கவனிப்பு நடக்கிறதாம். மூன்று ஷிப்ட் போட்டு மளமளவென நடைபெறும் ஷுட்டிங் மற்றும் போஸ்ட் புரடக்ஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அத்தனை பேருக்கும் விதவிதமான சாப்பாடு. டபுள் பேட்டா. அதுவும் வியர்வையின் ஈரம் காய்வதற்குள் வந்து சேர்வது என்று அசத்திக் கொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
இதனால் புது உற்சாகத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறது மொத்த யூனிட்டும்! ஆக… இந்த தீபாவளிக்கு வேதாளம் கன்பார்ஃம்!
உண்மையான தமிழர்கள், இந்த மலையாளி அஜித் படத்தை புறக்கணிக்க வேண்டுகிறோம்.
Nee cinema pakkaratha vidai poi polapa paru. Karanataka la thanni tharula , Kerala la thanni tharula , AP 20 pera suttanga appo yentha santhukullada okkattutu iruntha.
Ippo Ajith pad am pakkulana yellarum nalla position Ku vanthuruvangala ..
Tamil ina throgi yaa .. Unga vettla iruka ponnugala ethathu pannitara.
Rajabakshea Ku opposed a oru sign panna vakku illathavan Vijay avan yennada pannan ..
Illa arasaiyal asai katti than sontha thevaiku use panrara. ???
Mathi attra mudanea .. Uttla adutha velai thinga sappadu irukkanu paru.
Padatha padama paru, ithuler jaathi mathathai ulla kondu varatha! avan malaiyalina nee enna ?