வேதாளம் – பேய் படமா, இல்லையா?
கோடம்பாக்கத்தில் இது பேய் சீசன்! நல்லவேளை, ரஜினி கமல் அஜீத் விஜய் தவிர மற்ற எல்லாரையும் பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. சூர்யா வரைக்கும் கூட பேய் கதையில் நடித்துவிட்டார்கள். இந்த நேரத்தில் ‘வேதாளம்’ படத்தின் டீஸர் வந்ததும் பற்றிக் கொண்டது ஏரியா. கண்ணா மூச்சு ரே ரே… என்று குளோஸ் அப்பில் அஜீத்தின் உதடுகளும், பற்களும் டயலாக்கை சொல்ல சொல்ல இது பேய் படமாக இருக்குமோ என்ற சந்தேகமே வந்துவிட்டது ரசிகர்கள் மனசுக்குள்.
அஜீத் இதில் பேயாக நடிக்கிறாரா? அவரது ரசிகர்களை விரட்டிக் கொண்டிருக்கும் பெரிய கேள்வியே இதுதான்.
இதுவரை ரசிகர்களும், மீடியாக்களும் குழம்பிப் போயிருந்த அந்த சந்தேகத்திற்கு விடை? இந்த படத்தில் அஜீத் பேயாக நடிக்கவும் இல்லை. இது பேய் சம்பந்தப்பட்ட படமும் இல்லை.
அப்பாடா நிம்மதி!
ஓவர் பில்ட் அப் படத்துக்கு ஆகாது.
ஏகன், பில்லா – 2 போன்ற படங்களுக்கு ஏற்ப்பட்ட கதி தான்.