வெங்கடேஷ் வருவார்… நயன்தாரா வருவாரா?

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ செல்வி “ பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

தெலுங்கில் “ பாகுபங்காராம் “ என்ற பெயரில் தயாராகும் படமே “ செல்வியாக தமிழில் உருவாகிறது. ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 12 ம் தேதி இரு மொழிகளிலும் படம் வெளியாகிறது போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றும் ஜெயபிரகாஷ், சம்பத், சௌகார்ஜானகி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் – ARK.ராஜராஜா.

ARK.ராஜராஜாவிடம் படம் பற்றி கேட்டோம்…

வெங்கடேஷ் – நயன்தாரா ஏற்கனவே லஷ்மி என்ற படத்தில் நடித்து அந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆக்ஷன், காமெடி, பேமிலி கதையாக செல்வி உருவாகி உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது விழாவில் நாயகன் வெங்கடேஷ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்றார் ARK.ராஜராஜா.

வெங்கடேஷ் வருவார்… நயன்தாரா வருவாரா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இந்த பெரியவரால ஒரே கொட்ச்சலு! ரஜினி ரசிகர்களை அலற விட்ட டிராபிக் ராமசாமி

அதென்னவோ தெரியவில்லை. டிராபிக் ராமசாமியால்தான் பல இடங்களில் டிராபிக் ஜாமே ஏற்படுகிறது. திமுக பேனர்கள் இருக்கிற இடங்களில் மட்டும் கண்டும் காணாமல் போய்விடும் பெரியவர் ராமசாமி, அதுவே...

Close