சன்னிலியோனுக்காக சம்பளத்தை குறைத்த விஜய்!

விஜய்க்கு இது புதுசு இல்லை! சச்சின் படத்தில் பிரபல இந்தி நடிகையான பிபாஷா பாசு நடிக்க வேண்டும் என்று விரும்பினார் அவர். ஆனால் அப்போதே ஒரு கோடி சம்பளம் கேட்டு, உசிரை வாங்கினார் பிபாஷா. தயாரிப்பாளர் தரப்பு சற்றே தயங்கியதும், மின்னலாய் முடிவெடுத்தார் விஜய். என் சம்பளத்திலிருந்து ஐம்பது லட்சத்தை கழிச்சுகிட்டு, அதை பிபாஷாவுக்கு கொடுத்துருங்க… என்றார். விஷயம் சால்வ்!

சரித்திரம் ரிப்பீட்! இந்த முறை பிபாஷாவுக்கு பதிலாக சன்னிலியோன்.

சன்னிலியோனின் பெருமையை சொல்ல ஒருவருக்கு ஒரு வாய் போதாது! அப்படியாப்பட்ட அவர் ஏற்கனவே தமிழ் படத்தில் நடித்திருந்தாலும் விஜய் மாதிரி பெரிய ஹீரோ படத்தில் நடிப்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை? ஆனால் அதெல்லாம் புரிந்தால் அவர் ஏன் இடுப்பில் இஞ்ச் துணி கூட இல்லாமல் திரியப் போகிறார்? ஒரு கோடி சம்பளம் கேட்கிறாராம் இவரும். அதுவும் ஒரே பாட்டுக்கு குத்தாட்டம் போட!

மீண்டும் தயாரிப்பு தரப்பு பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா, இந்த கேண்டில் கீண்டில்… என்று யார் யார் போட்டோவோ காண்பிக்க, விஜய் தன் வழக்கமான அஸ்திரத்தை எடுத்திருக்கிறார். சன்னிலியோனுக்கு நீங்க பிக்ஸ் பண்ணியிருக்கிற சம்பளத்தை கொடுத்துருங்க. எக்ஸ்ட்ரா பில்லுக்கு நான் பொறுப்பு…!

கரும்பே சக்கரைக்கு ஆசைப்படும் போது இரும்பு மனசோட தடுத்து என்ன பயன்? சன்னி லியோனை வளைக்கும் வேலைகளில் இறங்கிவிட்டது படக்குழு!

To listen Audio Click below:-

https://youtu.be/11rjkk9iBNU

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இவர்தான் நவீன நாகேஷ்

’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித அறிவும்...

Close