லுக்கு வேணும்னா அதுக்கு விக்கு வேணும்! சங்கடத்தில் விஜய்?
‘முடியை கட்டி தேர் இழுப்போம். வந்தா தேர். வரலேன்னா ஹேர்’ என்று அலட்சியமாக பேச முடியாத ஒரே ஏரியா, சினிமா ஹீரோக்களின் மந்தகாச சபைதான்! என்னதான் விதவிதமாக விக்குகள் வந்தாலும், ஒரிஜனல் முடியை கோதிவிட்டு, ஓவராக அலப்பறை கொடுக்கிற சுகமே அலாதியல்லவா? கொஞ்சம் கொஞ்சமாக அந்த சுகத்தில், சூடத்தை கொளுத்தி காட்டிக் கொண்டிருக்கிறது விதி.
விஜய்60 படத்தில், விக் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். ஏன்? சிகிச்சை போகுதாம் சிகிச்சை. அதுவும் அமெரிக்காவிருந்து கொடுக்கப்பட்ட ஆலோசனைகளின்படி! இந்த படத்திற்கு முதலில் வைக்கப்பட்டதாக் சொல்லப்பட்ட ‘எங்க வீட்டுப் பிள்ளை தலைப்பு’ இப்போது இல்லையென மறுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் விஜய் வீட்டை முற்றுகையிடப் போவதாக சொன்ன மிரட்டல்தான். அதையும்தான் பார்ப்போமே என்று மல்லுக்கட்டுகிற நிலையில் அவரும் இல்லை.
இந்த நேரத்தில்தான் கொஞ்சம் கொஞ்சம் ஹேர் லாஸ் பண்ணி வருகிறது அவரது தலை. மூணு வேளையும் ஆரோக்கியா பாலிலேயே குளிக்கிற அளவுக்கு வசதியிருந்தும், சென்னையின் சுத்தகரிப்பட்ட மினரல் வாட்டர் கூட, விஜய் தலைக்குள் புகுந்து விளையாட்டு காட்டி வருவதால், உடனே காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு முடியையும் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். அமெரிக்காவுக்கு நேரில் சென்று சிகிச்சை செய்து கொண்டதன் காரணமாகதான் அவர் மொட்டையும் அடித்திருந்தாராம். அதன் மீதுதான் இப்போது விக் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார் அவர்.
பல வருஷங்களாகவே அவரை கெட்டப் மாற்ற சொல்லி கேட்டு வந்த இயக்குனர்களுக்கு, இந்த விக் கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்திருக்கும். எனிவே… விஜய் அரை குறை வழுக்கையில் வந்தால் அழகாகதான் இருப்பார் என்பது வேறு விஷயம்!
https://www.youtube.com/watch?v=PRzNVAOqDDk&feature=youtu.be