ஹரிக்கு இனி இடம் இல்லே! விஜய் கோபம்?
வானிலை மாற்றத்திற்கு ஆளாகி, நூலிழையில் இடி தாக்கும் அபாயம் கோடம்பாக்கத்தில் சகஜம். விழுந்தது இடியா? வேலைக்கே ஆகாத சீனி வெடியா? என்பதையும் சில நாட்களிலேயே உணர்ந்து கொள்ளலாம் இங்கே. அப்படியொரு இடியோ, வெடியோ…விழுந்திருக்கிறது டைரக்டர் ஹரி மீது. விஜய் வீசியிருக்கும் அந்த டமால் சமாச்சாரம்தான் கோடம்பாக்கத்தின் ஹாட் ஹாட்!
கடந்த பல வருடங்களாகவே டைரக்டர் ஹரி விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றொரு தகவல் இங்கு பேசப்பட்டு வருகிறது. ஆனால் பேச்சு பேச்சாகவே இருக்கும். ஒரு முன்னேற்றமும் ஏற்பட்டதில்லை அதில். ஆனால் கடந்த நான்கு மாதங்களாக இந்த காம்பினேஷன் குறித்து சற்று அழுத்தமாகவே பேச்சு அடிபட ஆரம்பித்தது இங்கே. அதற்கு காரணம், புலி படத் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார். இவரும் ஹரியும் நல்ல நண்பர்கள். இவர் மூலமாகதான் காய் நகர்த்தப்பட்டதாகவும் பேச்சு.
இந்த விஷயம் மெல்ல முன்னேற்றத்தை நோக்கி நடைபோடும் நேரத்தில்தான் இந்த பொல்லாத வானிலை மாற்றம். ஹரி என்கிற பெயரையே என் முன்னால் உச்சரிக்கக் கூடாது என்கிற அளவுக்கு கோபமாகிக் கிடக்கிறாராம் விஜய். நடுவில் என்ன நடந்தது? ஏனிந்த கோபம்? என்பது குறித்தெல்லாம் தெளிவான பதில்கள் இல்லாத நிலையில், ‘நானும் ஒண்ணும் சும்மா டைரக்டர் இல்லே. அவரு என்ன சொல்றது? நான் சொல்றேன் விஜய் வேண்டாம்’ என்கிற அளவுக்கு கொதி நிலைக்கு வந்திருக்கிறாராம் ஹரி.
விஷயம் பெரிசாகறதுக்குள்ளே பயர் எஞ்சினுக்கு சொல்லி, பதப்படுத்துங்கப்பா!
https://www.youtube.com/watch?v=q79oef58gpo