வர வர விஜய் ரஜினியாக முடிவெடுத்து விட்டார் போலிருக்கே?

‘சரியா நின்று சம்பவம் பண்றாருப்பா…’ என்று விஜய்யை கிள்ளி முத்தா கொடுப்பார்கள் போலிருக்கிறது அவரது ரசிகர்கள். விஜய் போடுகிற ஸ்கெட்ச் அப்படி! சர்கார் பட விஷயத்தில் கவருமென்ட் சீண்டிய பின், தனது திட்டங்களில் சில பல மாற்றங்களை செய்திருக்கிறாராம் அவர். அதுதான் இன்டஸ்ட்ரியில் கசிந்து இன்பமாக பொங்கிக் கொண்டிருக்கிறது ரசிகர்கள் மத்தியில்.

ரஜினி பீக்கில் இருந்தபோது ஒரு விஷயம் செய்தார். வருடத்திற்கு ஒரு படம். அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்று. ஆன்மீகம், சுய வெறுப்பு, தாங்க முடியா பிரஸ்டேஷன் இவற்றின் காரணமாக அவர் எடுத்த முடிவே அவருக்கு தாறுமாறான பாசிட்டிவ் சிக்னலாக அமைந்தது. அவர் படம் பலத்த தாமதத்திற்கு பின் வந்ததால் ரசிகர்கள் அலகு காவடி எடுத்து அங்க பிரதட்சணம் செய்யாத குறையாக ரசித்தார்கள். மகிழ்ந்தார்கள்.

ஆனால் விஜய் விஷயத்தில் நடப்பதே வேறு. மனம் முழுக்க சந்தோஷமாக இருக்கிற தருணத்தில் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார். வருடத்திற்கு ஒரு படம் என்பதுதான் அவரது அதிரடி முடிவு. ரசிகர்களை ஏங்க வைத்து படம் ரிலீஸ் செய்கிற போது தானாகவே ஒரு இமயமலை இமேஜ் வரும் என்பது அவரது கணக்கு. அதற்குதான் ரஜினியே முன் உதாரணமாக இருக்கிறாரே?

இந்த ஒரு வருட இடைவெளி, படத்தை பார்த்து பார்த்து உருவாக்க காரணமாக இருக்கும் என்பது அன் டவுட் ஃபுல் ஆச்சர்யம். அதே நேரத்தில் அரசியலையும் ஒரு கை பார்த்துவிடுவது என்கிற திட்டம் இருக்கிறதாம். அச்சு பிச்சு என்று அரைகுறையாக அரசியலை தெரிந்து கொள்ளாமல், முழுக்க முழுக்க அது குறித்து அறிந்து கொள்ள நேரம் ஒதுக்கப் போகிறாராம். அண்ணா பெரியார் அம்பேத்கார் எழுதிய புத்தகங்களை படிப்பது. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெ வின் அரசியல் நுணுக்கங்களை சொல்ல சொல்லி கேட்பது. இப்படி நிறைய நேரத்தை அதற்காக செலவு செய்வதுடன், மன்றத் தோழர்களை அடிக்கடி சந்திக்கவும் முடிவெடுத்திருக்கிறாராம்.

கஜா புயல் போல ஒரு கணக்கோட வரணும். எதிர்ல வர்றது எதுவா இருந்தாலும் உருட்டி தள்ளி உப்புமா கிண்டணும். இதுதான் விஜய்யின் ஒரே கணக்கு.

அது நிச்சயம் லாபக் கணக்காக இருக்கும். ஏனென்றால் விஜய் என்ற மூன்றெழுத்துக்குள் அப்படியொரு கரண்ட் இருக்கே!

1 Comment
  1. Stalin says

    காசு வாங்கி கொண்டு எதையாவது வாந்தி எடுக்காதேடா.
    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் இடத்தை விஜய் அல்ல அவன் அப்பன் வந்தாலும் ஒன்னும் புடுங்க முடியாது. டா. உயரப்பறந்தாலும் ஊர் குருவி கழுகு ஆகாதடா.
    ரஜினி டா தமிழன்டா.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காற்றின் மொழி / விமர்சனம்

Close