விஜய் கீர்த்தி சுரேஷ்! நடுவில் ஒரு டமால்!
‘அன்னம் தண்ணி இல்லாம கூட உழைக்கிறாரு’ என்று கிராமபுறங்களில் சொல்வார்களே… அது முற்றிலும் பொருந்துவது கீர்த்தி சுரேஷுக்குதான். தெலுங்கு தமிழ் இரண்டு லாங்குவேஜும் அவருக்கு ரத்ன கம்பளம் விரித்துக் காத்திருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு முக்கியமான படத்தை அவர் தவற விடுவார் போலிருக்கிறது. இதற்கு அவர் வருந்துகிறாரோ இல்லையோ? விஜய் ரசிகர்கள் ‘அச்சச்சோ’ என்பார்கள். ஏன்? கிளி தவற விட்டது விஜய் என்ற பழத்தை!
‘சர்கார்’ படத்தை அடுத்து அட்லீயுடன் விஜய் இணைகிற படத்தில் கீர்த்தி சுரேஷ்தான் ஹீரோயின் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் இப்படியொரு வாய்ப்பு வரும் என்றே நினைக்காத கீர்த்தி, கைநிறைய படங்களை அள்ளி வைத்திருக்கிறாராம். கால்ஷீட் ஒதுக்கிக் கொடுப்பதில் குழப்பம் வரும் போல தெரிகிறது. அதுமட்டுமல்ல… தொடர்ச்சியாக விஜய்யுடன் நடித்து வந்தால், சிவகார்த்திகேயனுடன் சேர்த்து கிசுகிசுத்ததைப்போல கிசுகிசுப்பார்கள் என்பதை அறியாதவரா அவர்?
‘இந்தப்படத்தில் என்னை விட்ருங்களேன்’ என்கிறாராம். மாற்று வழி?
ராகுல் ப்ரீத்சிங்கிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரே ஒரு குழந்தை, ஊரெல்லாம் பொம்மை! அனுபவிங்க விஜய்!
sottai thalapathikku keerthya romba pudichirucho?? nalla vechi pannunga.