நெருக்கடி கொடுத்த இயக்குனருக்கு செருப்படி கொடுத்த விஜய் சேதுபதி!

அறிமுக இயக்குனர்களுக்கு நடமாடும் லைட் அவுஸ்சாக இருக்கிறார் விஜய் சேதுபதி. ‘மூஞ்சில வெளிச்சம் விழணுமா, அண்ணனை போய் பாரு’ என்று அனுப்பி வைக்கிறது அவரவர் கால்கள். முடிந்தவரை புது இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் விஜய் சேதுபதிக்கு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அறிமுக இயக்குனர்களின் பட புரமோஷன்களில் பங்கெடுப்பதும் முக்கிய வேலையாக இருந்தது.

அண்ணே… ட்ரெய்லர் ரிலீஸ் பண்ணணும்.

அண்ணே… சிங்கிள் ட்ராக் ரிலீஸ் பண்ணணும்

அண்ணே… கிளாப் அடிச்சு படப்பிடிப்பை துவங்கி வைக்கணும்

இப்படி பல பல தம்பிகளின் குரலுக்கு அண்ணனின் கேட் திறந்தே கிடந்தது. ஆனால் ‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ என்கிற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிற வரைக்கும்தான் இதெல்லாம். கடந்த இரண்டு நாட்களாக இந்த மாதிரியான அறிமுக இயக்குனர்களுக்கு கேட் குளோஸ். ஏன்? ஏன்?

மேற்படி டைட்டிலை விஜய் சேதுபதி வெளியிடுவது போல ஸ்டில் எடுத்த அந்த இயக்குனர், அதற்கப்புறம் போஸ்டரில் ஒரு கிறுக்கு வேலை செய்தார். கடலை என்கிற வார்த்தைக்கு பதிலாக ஒரு டேஷ் பயன்படுத்தி, அதற்கப்புறம் ‘போட ஒரு பொண்ணு வேணும்’ என்று அச்சிட்டு சென்னை முழுக்க ஒட்டிவிட்டார். அதுவும் பெண்கள் கல்லூரி வாசல்களில் கூட பளிச்சென ஒட்டப்பட்டிருந்தன அந்த போஸ்டர்கள். பெரும் அதிர்ச்சியை வரவழைத்த இந்த போஸ்டர் குறித்து பலரும் காவல் துறைக்கு புகார் செய்தார்கள். ஆங்காங்கே சில போஸ்டர்களை பெயருக்கு கிழித்த போலீஸ், சம்பந்தப்பட்ட இயக்குனரை ஒன்றும் கிழிக்கவில்லை.

சில தினங்களுக்கு முன் நாம் வெளியிட்ட போஸ்டர்தான் இப்படி பிட்டு படம் போல நாறுகிறது என்பதை அறிந்து கொண்ட விஜய் சேதுபதி, சம்பந்தப்பட்ட அந்த இயக்குனரை நேரில் அழைத்து லெஃப்ட் ரைட் வாங்கினாராம். அதற்கப்புறம் தனது வலைப்பக்கத்திலிருந்து அந்த புரோமோஷன் ஸ்டில்லை நீக்கவும் செய்தார்.

ஒருவர் செய்த தவறால், இனி விஜய் சேதுபதி இழுத்த இழுப்புக்கெல்லாம் வர மாட்டார் என்பதுதான் கவலை. குடிநீர் தொட்டியில தடிமாடு விழுந்தது போல ஆகிவிட்டதே நிலைமை?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்துமா?

Close