ரஜினி திட்டவட்டம்! பல் இளித்தது பா.ஜ.க வின் நம்பிக்கை!

‘உருண்டையா இருக்கறதெல்லாம் பந்து, உப்பலா இருக்கறதெல்லாம் பூரி’ன்னு நம்புகிற கூட்டம் ஒன்று, ரஜினியை வச்சு ராஜாவாகிடலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. உங்க கணக்குல சைபரைத் தவிர ஒண்ணுமில்லே என்று உணர்த்தாமல் உணர்த்திவிட்டார் ரஜினி.

இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழக பி.ஜே.பி க்கு வேப்பங்காய் சூப்! ஆனால் வேகமா விழுந்தாலும் வேஷ்டி கிழியல பொசிஷனில் நின்று மாறி மாறி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் எச்.ராஜா, தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள். ‘அவர்தான் முன்னாடியே சொல்லிட்டாரே… நாடாளுமன்ற தேர்தல் எங்க இலக்கு இல்ல. சட்டமன்றம்தான்னு. அதைதான் இப்பவும் சொல்லியிருக்கார்’ என்று கம்பீரமாக கனைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவ்விருவரும்.

நிஜத்தில் ரஜினியின் இந்த அறிவிப்பு பா.ஜ.கவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கும். பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரை என் பெயரையோ, படத்தையோ, மன்றத்தின் கொடியையோ யாரும் பயன்படுத்தக் கூடாது என்று கூறியிருக்கிறார் அவர். ரஜினி அமைதியாக இருந்திருந்தால், தானாகவே அவர் தங்களுக்கு ஆதரவு தருவது போல் காட்சியை உருவாக்கியிருப்பார்கள். இப்போது அப்படி சொல்லவே முடியாதபடி ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கிவிட்டார் ரஜினி.

அதுமட்டுமல்ல, தலைமையின் சொல் மீறி ரஜினி ரசிகர்களும் ஈடுபட மாட்டார்கள் அல்லவா?

இந்த தேர்தலில் பி.ஜே.பி தமிழகத்திற்கு செய்து வரும் நன்மைக்கேற்ப வாக்குகள் மண்டையில் விழப்போவது நிச்சயம்! ரஜினி குறுக்கிடாமல் ஒதுங்கிக் கொண்டதற்கு பிற கட்சிகள் அவருக்கு தார்மீக நன்றி சொல்ல வேண்டியது முக்கியம்!

6 Comments
 1. Varuthan says

  State Assembly Election varrappa, vera oru dakalty reason solli innamum oru 5 years thalli poduvaan. Avan arasiyalukku vara maataan. summa poochandi kaati kitte irupaan

  1. பாரதிதாசன் says

   எங்கள் தலைவரை பற்றி தவறாக பேசினால் உன் உடம்பில் உயிர் இருக்காதுடா …..
   தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற எங்கள் மக்கள் தலைவர் ரஜினி அவர்கள் தாண்டா, தமிழ்நாட்டின் அடுத்த முதல் அமைச்சர்.

   1. Subbu says

    Funny. Yemathukarannu thambi sariyathaan solliirukaaple.

    1. தமிழ் பிரபாகரன் says

     த்தா.. நீ யாரிடம் ஏமாந்தியோ !!!
     தனிக்கட்சி துவக்கி, வரும் 2021 -ல் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளில் தனித்து நின்று தமிழக மக்களில் பேராதரவோடு தலைவர் ரஜினி அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார்.
     இது சத்தியம்.

 2. RIAZ AHMED says

  ஊழலற்ற நிர்வாகத்துக்கு. பணம் ஆசை இருந்தா. என்னை விட்டு இப்பவே போயிருங்க. வெளிப்படையான ஆட்சிக்கு. என்னோட ஆட்சி திருப்தி இல்லன்னா. 3வருஷத்துல நானே ராஜினாமா பன்னிருவேன். தென்னக நதிகளை இனைக்க. தண்ணீருக்கு முக்கியதுவம் தரும் அரசை தேர்ந்தெடுங்கள். இவர்தான் தமிழகத்தின் முதல்வரே.
  அன்னிக்கி சொல்றது தான் இன்னிக்கும் இன்னிக்கி சொல்றது தான் என்னைக்கும் தலைவன் டா..
  தீர்க்கமான தெளிவான முடிவு..போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது!’ – ரஜினிகாந்த்
  அடுத்து ஆட்சில உறுதியா ரஜினி தான் முதல்வர் -எங்கள் கிராமத்தில் கேட்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கு மாற்று கட்சி சொந்தங்கள் முதல் தலைவரின் தீவிர 80’s90’s ரசிகர்கள் உட்பட அதே உயிர்ப்புடன் வைத்திருப்பது தலைவரால் மட்டுமே சாத்தியம் .!! எங்க கிராமத்தில் இருக்கும் ஒரே ரசிகர் மன்றம்

 3. Gnaavel says

  neengal oru kammiya? eppoludhum naattai aandukondirukkum katchiyai kurai koorik kondirukkireerkale?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நெருக்கடி கொடுத்த இயக்குனருக்கு செருப்படி கொடுத்த விஜய் சேதுபதி!

Close