நண்பருக்காக நாலு கோடி! விட்டுக் கொடுத்த விஜய் சேதுபதி!
எதைக் கொண்டு வந்தாய், அதை இழப்பதற்கு? என்கிற கீதா பாலிசியை கடைபிடித்தால், கீதாவே கைவிட்டு போனால் கூட கவலைத் தேவையில்லை. கிறுக்குப் பிடிச்சு அலைய வேண்டிய அவசியமும் இல்லை! சினிமா பாதை மேடு பள்ளம் நிறைந்த கார்ப்பரேஷன் தார் ரோடு மாதிரி என்பதற்கு மிக சரியான சாட்சி, விஜய் சேதுபதியின் கிராஃப்தான்! தென்மேற்கு பருவக்காற்றிலிருந்தே ஏற்றமும் இறக்கமுமாக போய் கொண்டிருக்கிறது. ஒன்றில் விட்டு, இன்னொன்றில் பிடிக்கிற வித்தையை நன்றாக கற்றுக் கொண்டு விட்டார் மனுஷன்.
அப்படியிருந்தும் கடைசி மூன்று படங்கள் செம ஹிட் என்கிற நிலையில், நான்காவதாக திரைக்கு வந்திருக்கிறது றெக்க. இந்தப் படத்தை பற்றிய விமர்சனங்கள் அப்படி இப்படி இருந்தாலும், கலெக்ஷன் என்னவோ கெட்டிதான் என்கிறது மார்க்கெட் நிலவரம். இந்த நிலையில்தான் நண்பன் பிழைக்கணுமே என்கிற நல்ல எண்ணத்தோடு கலெக்ஷன் ரிப்போர்ட்டை கவனித்து வருகிறாராம் விஜய் சேதுபதி.
ஏன்? விஜய் சேதுபதியும் றெக்க படத்தின் தயாரிப்பாளர் காமன்மேன் கணேஷும் பள்ளி காலத்து நண்பர்களாம். விஜய் சேதுபதியை வைத்து ஆரஞ்சு மிட்டாய் படத்தை தயாரித்தவர் கணேஷ். அதில் ஏற்பட்ட நஷ்டத்தை தவிர்க்கதான் றெக்க படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் வி.சே. அதிலும் தனது சம்பளத்தில் சுமார் நாலு கோடி வரை குறைத்துக் கொண்டாராம்.
நட்புன்னா இப்படியல்லவா இருக்கணும்?
To listen audio click below:-
https://www.youtube.com/watch?v=AuVwx1xDkiw