அஜீத்தின் ட்விட்டர் ரசிகர்களை போட்டுத் தாக்கிய விஜய்! இது பைரவா குத்தல்!
இன்று திரைக்கு வந்திருக்கும் பைரவா, உலகமெங்கும் உள்ள விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது! அதிகாலை 1 மணிக்கே பல தியேட்டர்களில் படம் ஓப்பன் செய்யப்பட்டுவிட்டது. விஜய்யின் உண்மையான ரசிகர்களுக்கு சந்தோஷம் கரை புரண்டு ஓடுகிறது. பார்த்த படத்தையே திரும்ப திரும்ப பார்த்தும் வருகிறார்கள். ஆனால் நடுநிலை ரசிகர்களை சற்றே தடுமாறிதான் போயிருக்கிறார்கள். படம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. அதே நேரத்தில், அஜீத்தின் ரசிகர்கள் இந்த ஒரு நாளுக்காகவே காத்திருந்தது போல தேள் கொடுக்கு விரல்களாலும், நண்டு கொடுக்கு வாயினாலும் திகிடுதப்பாக விமர்சித்து வருகிறார்கள்.
அதிலும் ட்விட்டரில் இயங்கி வரும் அஜீத் ரசிகர்கள், ‘பைரவா பிளாப்’ என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி காலையிலிருந்தே தாறுமாறாக விமர்சித்து வருவதுதான் கொடுமையிலும் கொடுமை.
இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தேதான் படத்தில் ஒரு டயலாக் வைத்திருக்கிறார் விஜய். “தேவையில்லாத எவ்வளவோ விஷயங்களை ட்விட்டரிலும் வாட்ஸ் ஆப்பிலும் ஷேர் பண்றீங்க. இப்ப உருப்படியா இந்த விஷயத்தை ஷேர் பண்ணுங்க” என்பதுதான் அந்த டயலாக். அதென்ன உருப்படியான விஷயம் என்பது படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய சமாச்சாரம்.
இப்படி முதல் நாளே ‘பைரவா’ படத்தை தொங்க விடும் அஜீத் ரசிகர்களுக்காக சொல்லப்பட்ட டயலாக்காக இருக்குமோ?
https://youtu.be/Z_dG0d2u8Z8
என்ன அந்தணன்சார் உங்களுகும் tamilcinema.com உம் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது 🙂
Sir. Adichu vidunga kaasa panama. Andha dialogue sadharanama padathule varadhu. Adhukku kannu kaadhu mooku vachu pesi neengale usupethi vittu, rendu fans’um sanda podanuma?