விஜய் வெற்றிமாறன் சந்திக்கவே இல்லை! அதற்குள் வதந்தியா?
விஜய் தனது அடுத்தப்பட இயக்குனராக வெற்றிமாறனை தேர்வு செய்து வைத்திருப்பதாக கடந்த சில தினங்களாக ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது. வெற்றிமாறனின் வேகத்திற்கும் விஜய்யின் வேகத்திற்கும் நத்தைக்கும் குதிரைக்குமான வேக டிபரன்ஸ் இருக்கும் போது இப்படியொரு வதந்தி எப்படி வந்தது? ஏன் வந்தது?
கோடம்பாக்கம் இப்படிதான். சினிமாவுக்குள் இருக்க வேண்டிய திரைக்கதை வசனத்தையெல்லாம் சும்மா போக வர கொரித்துக் கொண்டிருக்கும். அப்படிதான் இப்படியொரு கற்பனையும் பரவியிருப்பதாக முனகுகிறார்கள் விஜய் வட்டாரத்தில்.
அதுமட்டுமல்ல… வெற்றிமாறன் இப்போது முழுக்க முழுக்க வடசென்னை என்கிற கனவு புராஜக்டில் இருந்து வருகிறார். இந்தப்படமே இரண்டு பாகங்களாக வெளியிடுகிற அளவுக்கு டெப்தோ டெப்த். இதன் வெற்றியை பொறுத்து, வடசென்னையை மூன்றாவது பகுதியாகவும் கொண்டு வருகிற ஐடியாவில் இருக்கிறாராம் அவர். அப்படியிருக்க… ஏன் விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டும்?
அதுபோக வெற்றிமாறன் எப்போதும் தனுஷின் கம்பெனி டைரக்டர். அந்த சொகுசையும் பாதுகாப்பையும் அவர் ஏன் கெடுத்துக் கொள்ளப் போகிறார்?
வதந்திகளே… அடங்குங்க!