எலக்ஷனுக்கு முன்னாடியே #விஜய்60 ஷுட்டிங்! விஜய் பரதன் திட்டம்
கடந்த மூன்று நாட்களாகவே சூடாகிக் கிடந்த தெறி ஏரியாவில், இப்போது தெறிக்க தெறிக்க மழை! படம்தான் க்ளீன் யு சர்டிபிகேட் வாங்கிருச்சே? இருந்தாலும், இந்த படத்தின் வரிவிலக்கு பற்றிய பதற்றமும் எதிர்பார்ப்பும் இல்லாமலிருக்காது தயாரிப்பாளருக்கும் நம்ம ஹீரோவுக்கும். தமிழகம் முழுவதுமே இதுவரையில்லாத அளவுக்கு பெரிய விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். காரணம் அட்லியின் மீதும், போலீஸ் விஜய் என்றால் அது எந்தளவுக்கு படு சூடாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும். இந்த நேரத்தில் வரிவிலக்கு ரொம்ப முக்கியமல்லவா? ஒருவேளை வரிவிலக்கு விஷயத்தில் ஏதேனும் இழுபறி நேர்ந்தால், விநியோகஸ்தர்களின் பாக்கெட் தொள தொளவென ஆகிவிடும் என்கிற அச்சமும் இருக்கிறது.
ஏப்ரல் 14 ந் தேதி திரைக்கு வரப்போகிறது தெறி. அதே நாளில் பரதன் இயக்கவிருக்கும் விஜய்60 படத்தின் துவக்க விழாவையும் நடத்த வேண்டும் என்று பிரியப்பட்டிருக்கிறாராம் விஜய். பொதுவாகவே பெரிய விழாக்கள் வைத்து படத்தை துவங்குகிற வழக்கம் அவருக்கு இல்லை. ஆனால் எளிமையாக நடந்தாலும், எக்கச்சக்க கொண்டாட்டங்களோடு ஆரம்பித்து வைப்பார்கள் அவரது ரசிகர்கள். இந்த முறையும் அப்படியே நடக்கும் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இதே ஏப்ரல் 14 ந்தேதி ஷுட்டிங் வைக்க சொல்லியிருக்கிறாராம் விஜய். மொத்தம் இரண்டே நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு, அதற்கப்புறம் தேர்தல் முடிந்த பின் தொடரலாம் என்பது அவரது யோசனை.
ஹீரோ சொன்னால், அதில் மாற்று ஏது? சரிங்ணா… என்று கூறியிருக்கிறாராம் பரதன். வேலைகள் விறுவிறுவென நடந்து கொண்டிருக்கிறது.