பாகுபலி ரைட்டருக்கே இந்த கதியா? அடப் பாவமே பாவமே!
மஞ்சக்கருவும் வெள்ளைக்கருவும் சேர்ந்ததுதான் ஆராக்கியமான முட்டை. அப்படியொரு சத்து நிறைந்த முட்டைதான் பாகுபலி என்றால், சந்தேகமில்லை… வெள்ளைக்கரு எஸ்.எஸ்.ராஜமவுலி என்றால், அதன் மஞ்சள் கரு கே.வி.விஜயேந்திர பிரசாத்தேதான். எஸ்.எஸ்.ராஜமவுலியின் அப்பாவான இவருக்குள்தான் எவ்வளவு கதை நாலெட்ஜ் என்று இந்திய சினிமாவே வியந்தது உண்டு.
பாகுபலி மட்டுமல்ல, நான் ஈ கூட இவர் எழுதிய கதைதான். இப்படி இந்திய சினிமாவின் கதை ஸ்டாராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட விஜயேந்திர பிரசாத்துக்குதான் அப்படியொரு சறுக்கல். (சறுக்கல் இவருக்கா, அல்லது இவரது கதையை விரும்பாத ரசிகர்களுக்கா?)
பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் குழுமம், இந்தியில் ஒரு சீரியல் எடுத்துக் கொண்டிருக்கிறது. இதன் கதை வசனம் விஜயேந்திர பிரசாத். சினிமாவில் வெற்றிபெற முடியாத கார்த்திகாதான் நாயகி. நடிகை ராதாவின் மகள் என்றால் உங்களுக்கு சட்டென புரியும்.
இந்த தொடர் வெளிவந்த கொஞ்ச நாட்களுக்குள்ளேயே ஸ்டார் நிறுவனம் போட்ட இலக்கை எட்ட முடியவில்லையாம். கதையை குடையோ குடையென குடைந்து சிதைத்து என்னென்னவோ செய்து பார்த்தவர்கள், சார்… நீங்க சீரியலுக்கு சரிப்பட மாட்டீங்க. போயிட்டு வாங்க என்று அனுப்பிவிட்டார்களாம் விஜயேந்திர பிரசாத்தை.
மூங்கில் வெட்ற இடத்துல புல்லாங்குழல் விற்கப் போனது இவரு தப்புதானே?