இந்தியாவின் அவமானம் விக்ரம்! அமெரிக்க தமிழ் சங்கம் சாபம்!

நாம் பல முறை நமது இணையதளத்தில் பேசிய விஷயம்தான். இன்று அமெரிக்கா வாழ் இந்தியர்களே, ‘ஆமாய்யா ஆமாம்’ என்று கூறிவிட்டார்கள். இவரை நேரில் பார்க்கும் போது “இந்தக் குழந்தையை பற்றியா இவ்ளோ கான்ட்வர்ஸி கிளப்புறானுங்க?” என்று நம்மைப் போன்ற பிரஸ் மீது மண்வாரி இறைக்கும் சிலரது மனசு. அப்படி நடந்து கொள்வார் விக்ரம். ஆனால் அவரால் தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் ஒருவர் இருவரல்ல. பலர்.

தனி மனித ஒழுக்கத்தில் மட்டுமல்ல, எல்லா வகையிலும் ‘மிஸ்டர் நற நற’ என்ற அந்தஸ்த்தை வேண்டி விரும்பி வரவழைத்துக் கொண்ட விக்ரமின் நிஜ முகத்தை தோலுரித்து காட்டிவிட்டார் அமெரிக்க தமிழ் சங்கத்தின் தலைவர் பிரகாஷ் எம்.ஸ்வாமி. பல வருடங்களுக்கு முன் ஜுனியர் விகடன் இதழின் ஆசிரியராக இருந்தவர் இந்த பிரகாஷ் எம்.ஸ்வாமி.

இப்போது என்ன நடந்தது?

அமெரிக்க நாட்டில் வாழும் இந்தியர்கள் ஒவ்வொரு வருடமும் நியூயார்க் நகரில் இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறார்கள். ‘கிரான்ட் பரேட்’ என்ற அந்த நிகழ்வில் பல்லாயிரம் பேர் கலந்து கொள்வார்கள்.

இந்த வருடத்திற்கான விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிலிருந்து பாபா ராம்தேவ், அபிஷேக் பச்சன், விக்ரம் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொண்ட இந்த விழாவில்தான் நடிகர் விக்ரம் தன் ஒரிஜனல் முகத்தை காட்டி, அவ்வளவு பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.

விக்ரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது பலரும் அவருடன் புகைப்படம் எடுக்கவும், பேசவும் சென்றுள்ளனர். ஆனால், விக்ரம் அவர்களுடன் பேசவும் விரும்பாமல், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் விரும்பாமல் வெறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறார். இது, அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பிரகாஷ் எம் சுவாமி அவரது முகநூலில் கூறியுள்ளதாவது,

“உங்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் விக்ரம். இந்தியர்களை அவமானப்படுத்தவும், எப்போதும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கவும் நாங்கள் உங்களை அழைக்கவில்லை. உங்களது ரசிகர்கள், நண்பர்களின் வாழ்த்துக்களையும் கூட நீங்கள் ஏற்கவில்லை. உங்களுடன் வந்த அபிஷேக் பச்சன் அனைவருடனும் நட்பாகப் பழகி, ரசிகர்களுடன் கைலுக்கிய போது, நீங்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர் போல நடந்து கொண்டீர்கள். உண்மையில் நாங்கள் பிரபுதேவாவைத்தான் அழைக்கலாம் என இருந்தோம். ஆனால், அவருடைய வேலைப்பளு காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

இதற்கு முன் இந்த இந்திய நாள் பரேட் நிகழ்வில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான், சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் மிகவும் எளிமையாகப் பழகினார்கள். ரசிகர்களை சந்திப்பதற்கும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்கம் அவர்கள் தயங்கவேயில்லை. விக்ரமை வெறும் 30, 40 பேர் சூழ்ந்ததற்கே அவர் இப்படி நடந்து கொண்டார், ஆனால், சரத்குமாரை ஒரு பெரும் கூட்டம் சூழ்ந்து கொண்டது, இருந்தாலும் அவருடைய பணிவான அன்பை நியூயார்க் மக்கள் மறக்க மாட்டார்கள். விக்ரம், நீங்கள் சரத்குமாரை விட தகுதியிலும், சீனியாரிட்டியிலும் பெரியவரா ?.

அது மட்டுமல்ல, அழைப்பிதழில் ‘தென்னிந்திய சூப்பர் ஸ்டார்’ என கண்டிப்பாகப் போடச் சொன்னீர்கள். வெளிநாட்டு நிகழ்வுகளில் விக்ரமை அழைக்க அவர் தகுதியானவர் அல்ல. அவருக்கு புகழில், தான் ஒரு ரஜினிகாந்த், ஷாரூக்கான் என நினைப்பு.

ஏர் இந்தியாவின் முதல் வகுப்பில் உங்களை அழைத்து வந்தது, சுற்றிப் பார்க்க அல்ல, அவ்வளவு செலவு செய்தது அவமானத்தை அனுபவிக்க அல்ல. உங்கள் மீது வெட்கப்படுகிறோம், நமது நாட்டுக்கு அவமானம், திரையுலகத்திற்கு அவமானம், நீங்கள் திமிர் பிடித்த ஒரு நடிகர், திமிர் பிடித்த அணுகுமுறை கொண்டவர்,” என காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இனிமே நாம என்னத்தை தனியா சொல்ல?

 

3 Comments
 1. thambivelupraba says

  டியர் அந்தணன்,
  விக்ரம் மீது எதற்கு இத்தனை வெறுப்பு..!? தொடர்ந்து விக்ரம்-பற்றி கேவலமான முறையில் எழுதிவருகிறீர்கள்..!? மீடியாவில் இருந்துகொண்டு இப்படி பொறுப்பற்ற முறையில் ‘தனிமனித’ தாக்குதலில் இறங்குவது அழகல்ல..! உங்களின் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும்..

  1. admin says

   எதுவும் இட்டுக்கட்டி எழுதப்படுவதல்ல. நன்கு தெரிந்த பின்தான் எழுதப்படுகிறது. உங்கள் கருத்துக்கு நன்றி

 2. Ranjit K Subramanian says

  Unknown info. about Vikram!! Shocked to hear about his character! But I have heard similar things about him! Fight between Him & Surya due to Vikram’s Strange/bad behavior towards Jothika during Dhool days!!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Kidaari Press Meet Stills Gallery

Close