மகனை காப்பாற்ற ஒரே வழி இதுதான்! -விக்ரம் அதிரடி முடிவு!
ஓப்பனிங் சரியா இல்லேன்னா ஒண்ணுமே சரியா இருக்காது என்பதை விக்ரமை விட அறிந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்ளோ பெரிய நடிகருக்கே ஆண்டுகள் பலவற்றுக்குப் பின்னால்தான் ‘சேது’ என்கிற ஹிட்டே வந்தது. அதற்கப்புறம் கிளம்பிய வண்டி, எல்லா ஸ்பீட் பிரேக்கரையும் ஏறி மிதித்துவிட்டு ஜம்மென்று பயணித்ததெல்லாம் பூர்வ ஜென்மத்தில் கலந்த பூஸ்ட் ஹார்லிக்ஸ்.
இவ்வளவு காலம் வண்டியை ஸ்டடியாக ஓட்டி வரும் விக்ரமுக்கு தன் குட்டி வண்டிக்கு ட்ரெய்னிங் கொடுப்பதுதான் பெருத்த சிரமமாக இருக்கிறது. நம்பி ஒப்படைத்த பாலாவும் நடு டயரில் பஞ்சர் போட்ட வருத்தம் அவருக்கு இன்னும் இருக்கிறது. இந்த நேரத்தில்தான் பாலா இயக்கிய வர்மாவை தூர வைத்துவிட்டு, மீண்டும் ஆதித்ய வர்மா என்ற பெயரில் அதே படத்தை உருவாக்க இறங்கினார் விக்ரம். இதற்காக செலவான தொகைக்கும், இனிமெல் செலவாகப் போகிற தொகைக்கும் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக வெற்றிலையில் வைத்து சத்தியமும் செய்திருக்கிறாராம்.
திட்டமிட்டபடி போர்ச்சுகல் ஏரியாவில் ஷுட்டிங்கை தொடங்கிவிட்டார்கள். தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் அசோசியேட் இயக்குனர்தான் இப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். என்ன நினைத்தாரோ விக்ரம்? சட்டென்று விளையாட்டுக்குள் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கிவிட்டார். முழு படத்தையும் அவரே இயக்கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
போர்சுகல் பகுதியில் நடக்கும் விறுவிறு ஷுட்டிங்கில் விக்ரம் ஷாட் கட் சொல்வதை வியப்போடு பார்த்து வேதனையோடு ரசித்துக் கொண்டிருக்கிறாராம் அந்த அசோசியேட்!
சொந்த புள்ளைக்கு விக்ரம் வைக்கப் போவது சூப்பா? ஆப்பா? இதற்கான விடையை தெரிந்து கொள்ள பாலா போலவே தமிழ்நாடும் ஈகர்லி வெயிட்டிங்!
Anthanan kusumbu. சொந்த புள்ளைக்கு விக்ரம் வைக்கப் போவது சூப்பா? ஆப்பா? இதற்கான விடையை தெரிந்து கொள்ள பாலா போலவே தமிழ்நாடும் ஈகர்லி வெயிட்டிங்! Answer leaked: Appu confirm