ரஜினிக்கு வில்லனா நடிக்கிறேன்! ஆனால் ஒரு கண்டிஷன்! விக்ரம் போட்ட கிடுக்கிப்பிடி, ஷங்கர் திணறல்?
எல்லாருக்கும் வருகிற ஆசைதான். விக்ரமுக்கும் வந்திருக்கிறது. அது என்ன? தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பது! விக்ரமுக்கு இருக்கிற தொடர்புக்கும் செல்வாக்குக்கும் அது ஒன்றும் பெரிய விஷயமேயில்லை. ஆனால், குட்டு பட்டால் கூட ஷங்கர் மாதிரி பிரமாண்ட இயக்குனர்கள் கையால் குட்டுப்பட வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்காதா என்ன? பொதுவாகவே பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தால் மட்டுமே, அறிமுக ஹீரோக்கள் பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர முடியும். அந்த வித்தை விக்ரமுக்கு தெரிந்திருப்பதால், டைரக்டர் ஷங்கரிடமே அந்த விண்ணப்பத்தை வைத்துவிட்டாராம். அதற்கப்புறம் அவர் போட்டது கண்டிஷன்.
அதற்கு தோதாக வந்து மாட்டியது எந்திரன் பார்ட் 2. இதில் ரஜினி நடிக்க சம்மதித்துவிட்டார். வில்லனாக நடிக்க ஹாலிவுட்டிலிருந்து யாரையாவது இறக்கலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும், வியாபார ரீதியாகவும் சரி… அடித்தட்டு மக்கள் ரசிக்கிற விஷயத்திலும் சரி… அதெல்லாம் ஒரு புண்ணாக்குக்கும் உதவாது என்பது ஷங்கருக்கு தெரியாதா என்ன? ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க தமிழிலேயே பெரிய ஹீரோ யாருக்காவது வலை வீசலாம் என்று காத்திருக்க, வசமாக சிக்கினார் விக்ரம்.
‘நான் இந்த படத்தில் வில்லனா நடிக்கறதுக்கு தயார். ஆனால் என் மகனை நீங்க உங்க படத்துல ஹீரோவா அறிமுகப்படுத்தணும்’ என்றாராம். இப்போதைக்கு நான் தயாரிக்கிற படத்தில் வேணும்னா உங்க பையனை நடிக்க வைக்கிறேன். நானே இயக்குகிற படத்தில் பிறகு பார்க்கலாம் என்று கூறியிருக்கிறாராம் ஷங்கர். இந்த பதிலில் விக்ரம் சமாதானம் ஆனாரா என்பதற்கும், எந்திரன் 2 ல் அவர் நடிக்கிறாரா என்பதற்கும் சேர்த்து விடை தெரிய…. காத்திருக்க வேண்டியதுதான். வேறு வழியேயில்லை.
தலைவர் ரஜினி அவர்களுக்கு எனது மன பூர்வமான வாழ்த்துக்கள்.
என்றும் நீங்கள் தான் எங்கள் இதயம் கவர்ந்த எவர் கிரீன் சூப்பர் ஸ்டார்.
எந்திரன் பார்ட் – 2 வெற்றி பெற வாழ்த்துக்கள். மக்கள் அன்பும் ரசிகர்கள் ஆதரவும் தமிழ் உள்ளவரை இருக்கும். வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி
பார்ட் – 2 வெற்றி பெற
வாழ்த்துக்கள். மக்கள் அன்பும்
ரசிகர்கள் ஆதரவும் தமிழ்
உள்ளவரை இருக்கும். வாழ்க
சூப்பர் ஸ்டார் ரஜினி