12 கோடியானது விக்ரம் சம்பளம்! பகீர் ஆன தயாரிப்பாளர்

போட்டிக்கு சரியான படங்கள் இல்லாததால் பொட்டியை நிரப்பிக் கொண்டிருக்கிறது இருமுகன்! கன்னாபின்னாவென்று கல்லா கட்டிக் கொண்டிருக்கும் இந்தப்படத்தால் தயாரிப்பாளர் தப்பித்தார் என்பது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், ‘சிக்கு விழுந்த குடுமி, விக்குக்கே சவால் விடுதே’ என்கிற வருத்தமும் கூடவே சேர்ந்து கொள்கிறது. ஏன்யா ஏன்? விக்ரம் தன் சம்பளத்தை தாறு மாறாக ஏற்றிவிட்டாரே?

கரிகாலன் என்ற படத்தை எப்பவோ ஆரம்பித்து, என்னென்னவோ காரணம் சொல்லி அப்படத்தை ஆறேழு வருஷமாக தள்ளிப் போட்டு வரும் விக்ரம் அதற்காக வாங்கிய அட்வான்சை மட்டும் நடுவில் திருப்பித் தந்தார் இல்லை. அப்போது நாலு கோடி சம்பளம் பேசி அவரை கமிட் பண்ணினாராம் தயாரிப்பாளர். கால்ஷீட் சொதப்பல் காரணமாகவும், பாதி வரை எடுத்த படத்தை கிடப்பில் போட்டுவிட சொன்னதாலும் விக்ரமால் ஏராளமான நஷ்டத்திற்கு ஆளாகியிருக்கிறார் அவர்.

இப்போது அதே கம்பெனிக்குதான் பிரம்மா பட இயக்குனர் சாக்ரடீஸ்சை கோர்த்துவிட்டிருக்கிறார் விக்ரம். திடீரென தனது சம்பளமாக 12 கோடியை நிர்ணயித்திருக்கிறாராம் அவர். நாலு கோடின்னு கமிட் பண்ணி, பனிரெண்டுல கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் விக்ரம், இன்னும் என்னவெல்லாம் சிக்கல் கொடுப்பாரோ?

தேன் மிட்டாய்னு நினைச்சு தேள் கொடுக்கை முழுங்கிட்டீங்களே தயாரிப்பாளர் சார்…

To listen audio click below :-

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Chevalier Kamalhaasan wishes for Thenandal Films’s Mera Woh Matlab Nahi Tha Drama – Stills Gallery

Close