விடிய விடிய தூங்கல! விக்ரமுக்கு பதற்றம்?
விக்ரம் நடித்த சமீபத்திய படங்கள் ரசிகனை சோர்வடைய வைத்திருக்கும் நேரத்தில், “கட்டபுள்ள…. இப்படியே இருந்தா தேற மாட்டே” என்று அவரே அவருக்கு புத்தி சொல்லிக் கொண்டு நடிக்க வந்த படம் இருமுகன். அரிமாநம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர்தான் இப்படத்தின் இயக்குனர்.
“எனக்கு நேற்றிரவு 3 மணி வரைக்கும் இவ்விழாவை எண்ணித் தூக்கமே வரவில்லை, பதற்றத்தைவிட எதிர்பார்ப்புதான் இதற்குக் காரணம்.
என் ஒவ்வொரு படம் செய்யும் போது அது ரசிகர்களாகிய உங்களுக்குப் பிடிக்குமா என்று பார்த்துதான் செய்வேன். அப்படித்தான் என் ஒவ்வொரு படத்தையும், கதையையும் அணுகுவேன். (பார்றா…..) படம் பேச வேண்டும். இந்தப்படம் பற்றி நான் பேச விரும்பவில்லை. இது ரசிகர்களாகிய உங்களுக்குப் பிடிக்கும். நான் மட்டுமல்ல ஆனந்த் சங்கரும் இந்தப் படத்துக்காக 9 மாதங்கள் காத்திருந்தார் .இந்தக் கதை ஓகே ஆனபிறகு வேறொரு பெரிய ஹீரோவை வைத்து இயக்கவும் அவருக்கு வாய்ப்பு வாய்ப்பு வந்தது. அது தர்மமல்ல என்று எனக்காகக் காத்திருந்தார்.
நான் இதில் முதன் முதலில் இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். அந்த பாத்திரத்தை வேறொருவர் செய்வதாக இருந்தது. ஏன் நாமே செய்தால் என்ன என்று தோன்றியது.,நடித்தேன். ஆனந்த் சங்கர் இளைஞர்தான். வயதில் சின்னவர்தான் ஆனால் முதிர்ச்சியோடு செயல்படுபவர். தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் துணிச்சல்காரர். நயன்தாரா, நித்யா மேனன் என்று நடிக்க வைத்து படத்தை பெரிதாக்கி விட்டார். ஹரியை வைத்து ‘சாமி2’ படத்தை அவரே தயாரிக்கவும் தயாராகிவிடடார்.
ஹரரிஸ் ஜெயராஜ் எனக்கு எத்தனையோ ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். இருந்தாலும் அந்த ‘மூங்கில் காடுகளே’ எனக்குப் பிடித்த ஒன்று. இன்றும் அது என் போனில் ஒலிக்கிறது. இதில் பாடல்களை அருமையாக கொடுத்துள்ளார். பின்னணி இசையும் அருமை. இதில் நான் நடிக்கும் இரண்டாவது பாத்திரத்தின் பெயர் ‘லவ்’ என்பது. அதற்கும் ஹாரிஸ் நன்றாக இசையமைத்துள்ளார். ஆர்.டி. டிராஜசேகர் ‘பீமா’ வைப் போலவே இதிலும் தன் ஒளிப்பதிவில் என்னை அழகாகக் காட்டியுள்ளார்.
நயன்தாரா பிரேமில் இருக்கும் போது ஒரு மேஜிக் நிகழும். இதிலும் அந்த ஹெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது.. நித்யாமேனன் அந்த பாத்திரத்துக்குள் புகுந்து வாழ்ந்து இருக்கிறார் என்றார் விக்ரம்.
வழக்கம் போல இந்த விழாவிலும் கலந்து கொள்ளவில்லை நடிகை நயன்தாரா!