கண்டிஷன் விஷால்? கப்சிப் மிஷ்கின்!

அகிரகுரோசோவா சமாதியிலேயே படுத்துக் கிடந்து, அங்கேயே உருண்டு புரண்டு அழுது, அந்த ஆத்மாவிடமிருந்து கொஞ்சூண்டு சரக்கையும் பறிமுதல் செய்துவிட்டு திரும்பியிருக்கிறார் மிஷ்கின். வந்த சூட்டிலேயே அவர் விஷாலிடம் கதை சொல்லி, புதுக் கூட்டணியை அமைத்துவிட்டார். ஷுட்டிங் கோயிங் ஆன்…! ஆனால் இந்த விஷால் கால்ஷீட்டுக்கு அவர் அலைந்த வருஷங்கள் கொஞ்சநஞ்சமல்ல. முகமூடி கதையையே முதலில் விஷாலிடம் சொல்லிதான் ஆரம்பித்தார் அவர். அதற்கப்புறம் ஜீவா உள்ளே புகுந்து “நான்தான் நான்தான்” என்று போராடியதும், சிம்புவும் மிஷ்கினின் கழுத்தை கட்டிப்பிடித்துத் தொங்கியபடி “இந்த படம் எனக்குதான் எனக்குதான்” என்று பிடிவாதம் பிடித்ததையும் நேரடியாக அனுபவித்த மிஷ்கின், இடம் மாறி, தடம் மாறி, கடைசியில் அந்த படத்தையே பப்படமாக்கிய கதையெல்லாம் இன்டஸ்ட்ரி மறந்திருக்கும். ஆனால் விஷால் மறப்பாரோ?

மிஷ்கின் தன்னை நாடி கதை சொல்ல வரும்போதெல்லாம், அவரை அவாய்ட் பண்ணிக் கொண்டே வந்தார். கடைசியாக “முகமூடி விஷயத்தில் ஏற்பட்ட மனக்கசப்புக்கு ஐ ஆம் ஸாரி” என்று கூறிவிட்டுதான் மிங்கிள் ஆனாராம் மிஷ்கின். இந்த முறை கண்டிஷன் போட்டது மிஷ்கின் இல்லை, விஷால்.

“உங்க படத்துல வர்ற ரிப்பிட்டேஷன் இதுல இருக்கவே கூடாது. குறிப்பா தலையை கீழே குனிஞ்சுக்கிட்டு சைக்கோ மாதிரி நடந்து வந்து ஹீரோ பைட் பண்ணுவாருல்ல? அது இருக்கவே கூடாது” என்றாராம் விஷால். “அதே மாதிரி வேல்டு சினிமாவை பார்த்துட்டு டெஸ்ட் பண்றேன்னு என் வாழ்க்கையை கெடுத்துடக் கூடாது. அவ்வளவு ஏன்? நீங்க இன்னொரு சித்திரம் பேசுதடி படத்தையே எடுத்துக் கொடுங்க. தப்பில்லே” என்றாராம். “அந்த படத்தில் வர்ற மாதிரி மஞ்ச சேலை டான்ஸ் இருந்தால் கூட நல்லதுதான்” என்று விஷால் அடுக்கிக் கொண்டே போக, மிஷ்கினின் ரியாக்ஷன் என்ன?

எல்லாத்துக்கும் ஆமென்!

Read previous post:
Uyire Uyire Movie Stills

Close