வியூகத்திற்குள் சிக்கிக் கொண்ட விஷால்! திணற திணற அடிக்கிறாங்கப்பா?

விஷாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற தயாரிப்பாளர் சங்க முழக்கத்திலிருந்து ஆரம்பித்து, நடிகர் சங்கத்தில் மூன்று கோடி ரூபாய் கையாடல் நடந்திருச்சு என்று கூறி போலீஸ் வரைக்கும் போயிருக்கும் வாராகி என்ற துணை நடிகரின் சீற்றம் வரைக்கும் தினம் ஒரு வேப்பங்காய் ஜுஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் விஷால். நடுவில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேறு, விஷாலை பிடிபிடியென பிடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில்தான் சொல்ல முடியாத வேறு பல சங்கடங்கள் அவரை சுற்றி சுற்றி வருகிறதாம்.

அதில் முக்கியமான சங்கடம் இதுதான். விஷால் தயாரிக்கிற படங்களுக்கு பைனான்ஸ் தர வேண்டாம் என்று சிலரால் சிலருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம். அதன் விளைவாக அவர் அடுத்தடுத்து தயாரிப்பதாக சொல்லப்பட்ட மிஷ்கின் படமான துப்பறிவாளனுக்கும், லிங்குசாமி படமான சண்டைக்கோழி பார்ட் 2 வுக்கும் பைனான்ஸ் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

இருந்தாலும், தற்போது ‘கத்திச்சண்டை’ படத்தை தயாரித்து வரும் நந்தகோபாலிடம், “நீங்களே துப்பறிவாளன் படத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டாராம் விஷால். முதலில் தயங்கிய நந்தகோபால், ஏகப்பட்ட யோசனைக்கு பின் சம்மதித்திருப்பதாக தகவல்.

நடிகர் சங்க நிதியில் தற்போது இருக்கும் பணத்தை கரைத்துவிட்டால், கட்டிடப்பணி அம்போவாகி விடும் என்று கணக்கு போட்டுதான் துணை நடிகர்கள் சங்கத்தையும் குரல் கொடுக்க வைத்தார்களாம். ஆனால், சங்கப் பணத்திலிருந்து பைசா கூட எடுக்க மாட்டேன். முதல்ல கட்டிடம். அப்புறம்தான் துணை நடிகர்களுக்கு நிதியுதவி என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம் விஷால்.

கட்டடத்தை கட்டி முடிப்பதற்குள், அதில் தொங்குற பூசணிக்காய் பொம்மை போலாக்கிவிடுவார்கள் போலிருக்கிறது விஷாலை!

 

2 Comments
 1. roja says

  சுரேஷ் காமாட்சிக்கு சில கேள்விகள்
  1.சரத்குமார் 10 வருசமா தலைவராய் இருந்தார் ஏன் பெயர் மாத்த வில்லை?
  சரத்குமார் தமிழ் என்று சொல்லுறீங்க கொழும்பு ஸ்ரீலங்காவில் சிங்களவர்களோடு சேர்த்து பிசினஸ் செய்கிறார் தெரியுமா?
  2.அப்பாஸ் என்ன தமிழனா? தமிழ் தமிழ் என்று சொல்லுறீங்க .உங்களுக்கு அம்மாவை பாத்தும் ரஜினியை பாத்தும் இதை கேட்க தைரியம் இருக்கா.
  3.சேரன் FB ல் சொல்லுறார் ஒரு நடிகன் தமிழ் உணர்வு இல்லை ஆனால் அவருக்கு பால் அபிசேகம் செய்கிறோம் என்று அவர் யாரை சொல்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.
  இதே சேரன் தான் லிங்கா இசை வெளியீட்டில் அவர் தான் தமிழ் நாடு CM ஆக வரவேண்டும் என்று அழுது சொன்னார்- அதுக்கு சீமான் பதில் அடி கொடுத்தது வேற கதை
  3.என்ன இருந்தாலும் “அருவருப்பு” என்று சொன்னது அது அவரின் சுய முகம் பின்பு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லி பிறகு இப்ப பிச்சை எடுக்கிறான் FB யில் , தான் என்னோ நல்லவன் மாதிரியும் விஷால் குள்ள நரியாம். நாம் -ஈழ தமிழர் ஒத்துமையா இருக்கணுமாம் என்று இப்ப என்னோ திசை திருப்பிரான்.

  சீமானோ சேரனோ அல்லது மட்டும் சிலரோ ஒன்றும் ஈழ தமிழ் பிரதிநிதிகள் இல்லை. விஷால் சொன்னது விஷாலின் கருத்து. இதை வைத்து நீங்கள் ஒன்றும் நல்லவன் ஆக வேண்டாம்
  சும்மா சங்கம் வைத்து கொண்டு எல்லாரையும் கட்டாய படுத்தி ஈழ தமிழருக்கு நீங்க ஒன்றும் உண்ணா விரதம் இருக்க வேண்டாம், பிறகு நான் அதை செய்தேன் இதை செய்தேன் என்று சொல்லவா? .
  உணர்வு உள்ளவன் செய்யட்டும் ,செய்யாதவன் ஒன்றும் துரோகி இல்லை, சேரன் மாதிரி செய்திட்டு சொல்லுறவன் ஒன்றும் நல்லவன் இல்லை
  உங்கள் சங்க, ஈகோ பிரச்சனையில் ஈழ தமிழரை இழுக்க வேண்டாம்

 2. roja says

  suresh kamatchi
  சுரேஷ் காமாட்சி (தாணுவின் குரல் ) கூவிரதை பாத்தால் பெரிய ஊழல் பிரோடுசேர் கவுன்சிலில் நடத்திருக்கும் போல .
  என்னோ தமிழ் தேசியம் மாதிரி காட்டி நீங்க ஒன்றும் நல்லவன் மாதிரி நடிக்க வேண்டாம்
  அது என்ன சேரன் கருத்து சொல்லலாம் விஷால் சொல்ல கூடாது ?
  சும்மா சீண்டி சரத்குமாரை மீண்டும் பிரச்சனையில் தள்ளாதேங்கோ. மீண்டும் அவங்க வெளியிட போறாங்கோ
  சரத்குமார் இவளவு அவமான பட்டு அம்மா காலடியில் இருப்பது ஏன் என்று எல்லோருக்கும் தெரியும்
  அது சரி தயாரிப்பாளர் சங்க தேத்தலில் ஒரு பெரிய தமிழ் இயக்குனர் தான் விஷால் தரப்பில் போட்டி இட போறாராம் .உண்மையா ?
  விஷால் ஒரு கமிட்டி மெம்பெர் ஆக தான் போட்டி போடா போறார்
  நீங்களும் தாணுவும் எவ்வளவு காசு குடுத்து வெல்லலாம் என்று யோசியுங்கோ .
  சூப்பர் ஸ்டார் மெல்லமாய் தாணுவின் ப்ரோடுக்ஷனில் இருந்து kabali2 இருந்து விலகிட்டார் .
  பல விடயம் நடக்குது அதை பாருங்கோ சும்மா தமிழ் தெலுங்கு என்று கூவாம.
  காசு குடுத்த என்னவும் செய்யலாம் நாம் பார்த்தோம்-ex வாராகி
  p.s கட்டடம் கட்ட முதல் யார் யார் எல்லாம் பேமஸ் ஆக வேணுமோ கருத்து சொல்லி போராட்டம் நடத்தி செய்திடுங்கோ பிறகு சான்ஸ் கிடைக்காது

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Actor Vishal B’Day Celebration In Nadigar Sangam

Close