நான் வேணா அஜீத் சார் ————– விழட்டா? கட்ட கடைசியாக விஷால்!
பல்லாண்டுகளாக ஓடாத திருவாரூர் தேரை தான் முதன் முறையாக முதலமைச்சர் ஆனதும் ஓட வைத்தார் கலைஞர் கருணாநிதி! இத்தனைக்கும் அவர் கடவுளை நம்பாத நாத்திகர். கிட்டதட்ட திருவாரூர் தேர் போலதான் நகராமலிருக்கிறது அஜீத் மனசு. அதை ஓட வைக்க கலைஞர் வந்தாலும் ஆகாது. பத்து யானை ஒரே நேரத்தில் இழுத்தாலும் நடக்காது. இந்த உண்மை புரிந்திருந்தும் கடைசி நேரம் வரைக்கும் தன் முயற்சியை தளர விடக் கூடாது என்று இருந்தாராம் விஷால்.
இதில் ஒரு முக்கியமான லாஜிக்கும் இருக்கிறது. ராமர் யார் என்று பார்க்காதீர்கள். அணிலாக இருந்து நடிகர் சங்க கட்டிடம் உருவாக உதவுங்கள் என்று கமல்ஹாசனும், இந்த நல்ல முயற்சியில் விஜய் அஜீத் இரண்டு பேரும் கை கொடுக்கணும் என்று நடிகர் பிரபுவும் ஓப்பனாகவே கூறிவிட்டார்கள். இவ்வளவுக்கு பிறகும் அஜீத் தரப்பிலிருந்து பலத்த மவுனமே நிலவி வருகிறது. நாளை நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டியில் அஜீத் கலந்து கொள்வதாக முன்பே தெரிய வந்திருந்தால் ஸ்பார்ன்சர்களும் குவிந்திருப்பார்களாம். ஆனால் இந்த ஸ்டார் கிரிக்கெட்டுக்கு எதிராக அஜீத் ரசிகர்கள் கிளப்பி வரும் வலைதள போராட்டத்தால், விளம்பர தாரர்களும் முன்பு போல பெருமளவு பணத்தை இறைக்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த விரக்தியின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் அஜீத்திற்கு நெருக்கமான ஒருவரை அழைத்து பேசிய விஷால், நான் வேணா அஜீத் சாரோ ————— விழவா? என்று கேட்க, அதை அப்படியே அவரது காதுக்கு கொண்டு போனாராம் அந்த நபர்.
ரிசல்ட் என்ன? பல்லுல விழுந்த ஒரு பொட்டுக்கடலை கூட நொறுங்கல….
அஜித் இல்லாமல் மேட்ச் நடக்க முடியாது or நடந்தாலும் வெல்ல முடியாது.அஜித் தான் தலை.நாங்க நம்புகிறோம்
very bad of ajith
ஆணியே புடுங்க வேண்டாம். அஜீத் சொல்ற மாதிரி நடிகனுங்க நீங்களே காசு போட்டு கட்டடம் கட்டிக்குங்க.
Your write-up is biased; one sided. Please be neutral.
pullaiyum killi vidunga… aatti vudunga…
nadigar sangam cricket nadathi , panam thirattakoodathunnu oru thani manusunakku solla rights illaiya