விஜய் அவார்ட்ஸ்! கதறவிடும் விஷால்?

“சம்பாதிக்க சினிமா வேணும். ஆனா அதே சினிமாவுக்கு நல்லது மட்டும் செய்ய மாட்டீங்க, அப்படிதானே?” என்று தனியார் தொலைக்காட்சிகளை நோக்கி தாறுமாறாக கோபப்பட்டு வருகிறது தயாரிப்பாளர் சங்கம். ஏன்? தமிழ்நாட்டில் சினிமா கிளிப்பிங்ஸ்களை போட்டு சம்பாதிக்கும் சேனல்கள், தமிழ் படங்களின் சேட்டிலைட் உரிமையை காசு போட்டு வாங்குவதில்லை என்ற கோபம்தான். முன்னணி சேனல்கள் சிலவற்றை தவிர, பிற சேனல்கள் சிறு படங்களை வாங்குவதேயில்லை.

அந்த லிஸ்ட்டில் விஜய் டி.வியும் இருப்பதால், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு தடை போட்டுவிட்டார்கள் கடந்த முறை தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர்கள். அந்த தடையை உடைக்க வேண்டும் என்றால் என்ன செய்யணும்? தயாரிப்பாளர் சங்கத்திற்கு சில கோடிகள் நன்கொடை தரணும்? அதற்கு முன் வந்த சேனல், அப்படியே தமிழ் படங்கள் சிலவற்றையும் விலை கொடுத்து வாங்க முன் வந்தது. அதுமட்டுமல்ல, வரும் நிதியாண்டில் தமிழ் படங்களை வாங்க சுமாடர் 100 கோடியை ஒதுக்கப் போவதாகவும் கூறியதாம்.

செஞ்ச தவறுக்குதான் பரிகாரம் தேட்றாங்களே, அப்புறமும் ஏன் அவங்க கோரிக்கையை இழுத்தடிக்கணும்? இந்த கேள்விதான் இப்போது சங்க உறுப்பினர்களிடத்தில் நிலவுகிறதாம். ஏன்?

விஜய் தொலைக்காட்சி கொடுப்பதாக சொன்ன தொகை போதாது. இன்னும் வேணும் இன்னும் வேணும் என்று நெருக்குகிறார்களாம். ‘நாங்கள் கொடுக்க முன் வந்ததே நியாயமான, நிச்சயமான தொகை. அதையும் தாண்டி இரண்டு மடங்கு மூன்று மடங்கு கேட்டால் நாங்கள் என்ன செய்வது? சினிமாக்காரர்கள் உதவியே வேண்டாம். விஜய் அவார்ட்ஸ்சும் வேண்டாம். சேனல் ரைட்ஸ் வாங்கி சினிமா படங்களை ஒளிபரப்பவும் வேண்டாம். நமக்குதான் ஆயிரம் புரோக்ராம்கள் இருக்கிறதே, அதுபோதும்’ என்கிற விரக்தி நிலைக்கு வந்துவிட்டதாம் விஜய் டி.வி.

பட்டினியா கூட கிடப்போம். பழைய சோறு திங்க மாட்டோம்னா எப்படி? யோசிங்க விஷால் அண் கோ!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்?

Close