யாரு சொன்னாலும் அடங்க மாட்டேன்! விறுவிறு விஷால்! மொறு மொறு தேர்தல்!

பஞ்சாயத்து தேர்தல் வந்தா கூட “பார்த்துருவோம்யா…” என்று முழுக் கையை ஏற்றிக் கொண்டு கிளம்புகிற அளவுக்கு தேர்தல் மேனியாவில் சிக்கிக் கொண்டிருக்கிறார் விஷால். போன சில வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த இந்த பளக்க வளக்கம், இன்னும் இன்னும் வீரியமாகிக் கொண்டிருப்பதுதான் விபரீத ராஜ யோகம்!

“இந்த தேர்தலில் அவரு நிக்க மாட்டாருப்பா…” என்று பந்தயம் கட்டி பரவசப்பட்ட அத்தனை பேருக்கும் ஷாக் கொடுத்துவிட்டார் விஷால். மீண்டும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கு வந்துவிட்டாராம். இந்த தேர்தல் செலவுக்காக இரண்டரை கோடி ரூபாய் கடனாக கேட்டு ஒரு நண்பர் வீட்டு கதவை தட்டியிருக்கிறார். ரிசல்ட் பாஸா, பெயிலா என்பது இருக்கட்டும். விஷாலின் இந்த தேர்தல் ஆசை, நடிகர் சங்கத்தோடு நின்று விடுமா? இல்ல… தயாரிப்பாளர் சங்கத்திலும் தொடருமா? இதுதான் கொஸ்டீன் நம்பர் கோடி!

கடைசி நிமிஷ தகவலாக தயாரிப்பாளர் சங்கத்தையும் ஒரு கை பார்த்துவிடுவது என்கிற முடிவுக்கு அவர் வந்ததாக சொல்கிறார்கள். ரைட்… சினிமா நிலவரம் எப்படி? முன்பு போல எடுத்தோம் கழித்தோம் ரக படங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் விஷால். அடிச்சா சிக்சர். விழுந்தா கேட்ச் என்கிற அளவுக்கு கதை தேர்வில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

விரைவில் வெளிவரப்போகும் அயோக்யா, விஷால் பட வரிசையிலேயே அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்கிறார்கள். அதாவது தயாரிப்பு செலவே முப்பத்தைந்து கோடி. 110 நாட்கள் கால்ஷீட் என்று ஏக அக்கறை செலுத்தியிருக்கிறார் மனுஷன்.

“சினிமாவுல வேணும்னா ஜெயிச்சுட்டு போவட்டும். சங்கம் பக்கம் வந்தாரு… பங்கம் பண்ணிடுவோம்” என்று பல்லை கடிக்கிறது எதிர் கோஷ்டி!

கடவாப் பல்லுல கல்லு சிக்குன மாதிரி ஏன்யா டென்ஷன் ஆவுறீங்க? ஜனநாயகத்துல அடுத்தவங்களை வெறியேத்துறதும் ஒரு ஆர்ட்தானே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காணொளிகள் பொய் சொல்வதில்லை பிரகாஷ்ராஜ்!

Close