ஹன்சிகாவுக்கு இனி அம்மா வேஷம்தான் சரி! அதிர்ச்சியில் இன்டஸ்ட்ரி!
இன்று திரைக்கு வருவதாக இருந்த அதர்வாவின் 100 பல்வேறு இம்சைகளால் தள்ளிப் போய்விட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் சினிமாவில் அறிமுகமான அதர்வா, ஆடிக்கொரு ஹிட்டு, அமாவாசைக்கு ஒரு வெற்றி என கொடுத்து வரும் நிலையில், 100 வெளிவரவிருந்தது. முன்னதாக திரையிடப்பட்ட பிரத்யேக ஷோவை பார்த்த பத்திரிகையாளர்கள், ‘படம் ஹிட்’ என்கிற முடிவுக்கும் வந்திருந்தார்கள். (ஆங்காங்கே சொதப்பல்கள் இருந்தாலும்)
இந்த நிலையில்தான் படம் திரைக்கு வராமல் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது. எல்லா படங்களுக்கும் நேரும் ‘பைனான்ஸ் பைல்ஸ்’தான் இந்த படத்திற்கும்.
இதற்கிடையில் படம் பார்த்த மேலும் சில மீடியேட்டர்களும், சினிமா முக்கியஸ்தர்களும் படத்தில் வரும் ஹன்சிகாவின் தோற்றத்தை பார்த்து பேரதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டதாக தகவல். பவுடர் பலத்துலதான் பப்பாளியே ஜொலிக்குது என்பது போல இருக்கிறார் ஹன்ஸ். ஒட்டிப்போன கன்னங்களும், வற்றிப்போன வாலிபமுமாக அவர் வந்த கோலம் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியது.
நம்ம ஹன்சிகாவுக்கு என்னதான் ஆச்சு என்று முணுமுணுத்தவர்களுக்கு ஒரு பதிலும் உருப்படியாக கிடைக்கவில்லை என்பதுதான் சோகம்.
இது ஒருபுறமிருக்க… எப்போதும் பிரஸ் ஷோவின்போது படத்தின் ஹீரோ வந்து பத்திரிகையாளர்களை சந்திப்பார். அதர்வா நேற்று ஏனோ அதையும் செய்யவில்லை.
ஹ்ம்ம்ம் அவருக்கு என்ன கோபமோ?
kanda olukkam ketta naayellam straw pottu vurincha yennaya minchum?
[…] post ஹன்சிகாவுக்கு இனி அம்மா வேஷம்தான் சர… appeared first on New Tamil […]