அயோக்யா இன்று ரிலீஸ் இல்லை! காரணம் விஷாலா? ஸ்பைடர் கடனா?
கோடம்பாக்கம் ஒரு லார்ஜ் பிரசவ வார்டு போலாகிவிட்டது. எல்லா படங்களுமே மூச்சை பிடித்துக் கொண்டு கதறி கதறிதான் ரிலீஸ் ஆகிறது. “உங்க கொள்ளு தாத்தா எங்க தாத்தா கடையில பீடி வாங்கிட்டு கடன் வச்சுட்டார். வட்டியோட அது உங்க படத்தின் கடன் கணக்கில் வந்து நிக்குது. அதை செட்டில் செஞ்சாதான் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம்” என்று கோடியும் லட்சமுமாக திருப்பிக் கேட்கும் கும்பல் ஒன்று எல்லா படத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
அயோக்யாவுக்கும் அதே பஞ்சாயத்துதான். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மது, மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படத்தை தயாரித்தவர். அந்தப்படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் விநியோகஸ்தர்களுக்கு மூன்று கோடி ரூபாய் பாக்கி. அதை தந்துவிட்டு படத்தை வெளியிடுங்க என்று கழுத்தில் கத்தி வைத்துவிட்டார்கள். ஒரு வாரமாக நடந்த பேச்சு வார்த்தை உடன் பாட்டை எட்டவில்லை. விளைவு? படம் இன்று ரிலீஸ் ஆகவில்லை.
தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்படும் இன்னொரு காரணம் பகீர். “இந்தப்படத்திற்கு அதிக செலவை இழுத்துவிட்டதுடன், பல நாட்கள் ஷுட்டிங்குக்கே வராமல் கம்பி நீட்டிவிட்டார் விஷால். பேசிய சம்பளத்தை விட அதிக சம்பளம் கேட்டு டார்ச்சர் செய்தார். அதுவே தனக்கு பல கோடிகள் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. எனவே இந்த மூன்று கோடியை அவரே கட்டட்டும்” என்கிறாராம் தயாரிப்பாளர்.
இதற்கிடையில் விஷாலின் அயோக்யா வருவதால், தங்கள் பட ரிலீசை தள்ளி வைத்த பல தயாரிப்பாளர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். “யோவ்… நீங்க ரிலீஸ் பண்ற சுச்சுவேஷன் இல்லேன்னா முன்னாடியே சொல்லி தொலைச்சுருக்கலாம்ல. நாங்க எங்க படத்தை ரிலீஸ் செய்திருப்போமே? தியேட்டர் கிடைக்காம அல்லாட விட்டுட்டு அப்புறம் நீங்களும் வரலேன்னா எப்படி?” என்கிறார்கள் அவர்கள்.
அயோக்யாவை வெளியே கொண்டு வர விடிய விடிய பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
விடிவு கிடைக்குமா?
ஓ …. த்தா …. நீ ஒரு விஜய் அஜித் அடிமைடா. அவங்களிடம் காசு வாங்கி கொண்டு ஏதாவது உளறி கொட்டாதே. உண்மையை எழுதுடா
ஸ்பைடர் கடனா? illai. karuvayanin soo..thu koluppu
[…] […]